குறுகிய காலத்திற்குள் விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளில் ஈடுபட்ட கோவை மாநகர காவல்துறைக்கு பாராட்டுக்கள். – டிஜிபி சைலேந்திர பாபு செய்தியாளர்கள் சந்திப்பு. கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தான் தற்போது வரையில் தமிழகத்தில் தலைப்பு செய்தி. இந்த சம்பவத்தில் ஜமேஷ் முபின் உடல் கருகி உயிரிழந்துவிட்டார். அவருடன் தொடர்புடைய 6 நபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் இருக்கிறார்கள். இந்த வழக்கானது தமிழக காவல்துறையிடம் இருந்து முதல்வர் பரிந்துரையின் பேரில் என்ஐஏ அதிகாரிகளிடம் […]
கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு. கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொள்ளை, கொலை சம்பவம் நடைபெற்றது. இதில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உட்பட 11 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். கோடநாடு கொலை கொள்ளைச் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே சேலத்தில் நடந்த விபத்தில் மர்மமான முறையில் ஓட்டுநர் […]
காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருவோரை கனிவுடன் நடத்த வேண்டும். அவர்களை கேலி செய்ய கூடாது என சில அறிவுறுத்தல்களை டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை மூலம் காவலர்களுக்கு அனுப்பியுள்ளார். காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வருவோரை சரிவர நடத்துவதில்லை அவர்கள் தாங்களை தான் பெரிய அதிகாரிகள் என சிலர் நினைத்து செயல்படுகின்றனர் என்ற புகார்கள் அவ்வப்போது எழுவது உண்டு. தற்போது அது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு ஓர் அறிக்கை ஒன்றை அனைத்து காவலர்களுக்கும் அனுப்பி உள்ளார். […]
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் வந்த அரை மணி நேரத்திற்குள் காவல்துறை சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் வந்த அரை மணி நேரத்திற்குள் காவல்துறை சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்க வேண்டும் என காவல்துறையினருக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். மேலும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சொந்தங்கள் மூலமாக குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் குற்றங்கள் நிகழ்ந்தால் உடனடியாக மாவட்ட […]
போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு இயக்கம் மூலம் 23 டன் கஞ்சா , 20 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டிஜிபி சைலேந்திரபாபு எழுதிய கடிதத்தில், 2021-ம் ஆண்டில் பல்வேறு சவால்களை காவல்துறை தைரியமாக எதிர்கொண்டது. காவல்துறையின் ஆண், பெண் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அனைத்து சூழலிலும் அரண்போல் நின்றதால் சாத்தியமானது. இதயத்தில் எந்தக்கெடுதலும் இன்றி நமது திறமையாலும், அறிவினாலும் போரிடுவோம். தமிழகத்தில் கொரோனாவிற்கு எதிரான போரில் 139 காவல்துறையினரை இழந்துள்ளோம். தமிழக காவல்துறையின் கண்ணியம் குறையும் வகையில் அதிகாரிகள் […]
பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகே விற்கப்படும் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் மற்றும் லாட்டரி விற்பனையை ஒழிக்க டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவு. இதுகுறித்து வெளியான அறிக்கையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் மற்றும் லாட்டரி விற்பனையை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க, இன்று (06:12.2021) முதல் 06.01.2022 வரை ஒருமாத காலம் “கஞ்சா மற்றும் லாட்டரி ஒழிப்பு வேட்டை ” நடத்த வேண்டும். இதில் கீழ்க்காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். […]
புதியதாக அமையும் ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகத்தில் இடம்பெறும் காவல் நிலையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தின் கீழ் 104 காவல் நிலையங்கள் இடம்பெறும். புதியதாக அமையும் ஆவடிகாவல் ஆணையரகத்தின் கீழ் 25 காவல் நிலையங்கள் இடம்பெறுகின்றன. தாம்பரம் ஆணையரகத்தின் கீழ் 20 காவல் நிலையங்கள் இடம்பெறும். 3 காவல் ஆணையரகத்துக்குட்பட்ட காவல் நிலையங்களின் பட்டியலை டி.ஜி.பி சைலேந்திர பாபு வெளியிட்டார். அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வெள்ளவேடு, செவ்வாப்பேட்டை, சோழவரம், மீஞ்சூர், காட்டூர் ஆவடி காவல் […]
தேன்மொழியின் உயிருக்கு ஆபத்தில்லை என்று ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். நேற்று ஈரோட்டைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் தேன்மொழி என்ற இளம்பெண்ணை அரிவாளால் வெட்டினார்.அரிவாளால் இளம்பெண்ணை வெட்டிய பிறகு சுரேந்தர் ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். சுரேந்தர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .மேலும் படுகாயமடைந்த தேன்மொழியும் அனுமதிக்கப்பட்டார். தேன்மொழி சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு நேரில் சென்று நலம் விசாரித்தார்.அப்போது அவர் கூறுகையில், தேன்மொழியின் […]