ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழும் வேளையில் சமூக வலைதளத்தில் சிலர் இந்த தாக்குதலுக்கு ஒரு குறிப்பிட்ட பிரிவினைரை குற்றம்சாட்டி வருகின்றனர். இதே தாக்குதலில் தான் அப்பாவி மக்களை காப்பாற்றும் பெரும் முயற்சியில் ஒரு இஸ்லாமிய தொழிலாளி தனது உயிரை இழந்துள்ள செய்தி மனிதம் காக்க இன்னுயிர் விட்ட உன்னத நிகழ்வாக மாறியுள்ளது. […]