2020 முடிவதற்குள் கொரோனா நடுப்பு மருந்தை கண்டு பிடித்து விடலாம் என்று சுவிஸ் விஞ்ஞானி மார்ட்டின் பேச்மேன் என்பவர் அறிவித்துள்ளார். உலகளவில் கொரோனா வைரசால் இதுவரை 27,48,938 பேர் பாதிக்கப்பட்டு, 1,92,153 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 7,57,634 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் மட்டும் 23077 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 718 பேர் உயிரிழந்துள்ளனர். 4749 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. […]