இனிமேல் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட இந்திய பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை இன்றி தங்கள் நாட்டிற்குள் அனுமதி அளிக்கப்படும் என சுவிச்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் பரவி வந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் பல நாடுகள் இந்திய பயணிகள் தங்கள் நாடுகளுக்கு நுழைவதற்கு அனுமதி மறுத்தது. இந்நிலையில் இந்தியாவுடனான விமான போக்குவரத்தையும் பல நாடுகள் தற்காலிகமாக நிறுத்தி இருந்தது. இந்நிலையில் தற்பொழுது இந்தியாவில் கொரோனாவின் […]
சுவிட்சர்லாந்தை சேர்ந்த இணைய நிறுவனம் பெயரை வைத்தால் 18 ஆண்டுகளுக்கு இலவச WIFI. சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு இணைய சேவை வழங்கும் நிறுவனமான ட்விஃபி (Twifi) தங்களது பிராண்டின் பெயரை குழந்தைக்கு பெயர் சூட்டுவதால் அடுத்த 18ஆண்டுகளுக்கு இலவச வைஃபை வசதியை வழங்கும் புதுமையான திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள அந்த நிறுவனம் இவ்வாறு எங்கள் நிறுவனத்தின் பெயரை வைப்பதன் மூலம் .அவர்கள் தங்கள் பருவ வயதை அடையும் வரை முற்றிலும் இலவசமாக இணையத்தில் உலாவ அனுமதிக்கப்படுகிறார்கள் […]
ஜெனீவா விமான நிலையம் பனிப்பொழிவு அதிகமானதால் மூடப்பட்ட நிலையில் மீண்டும் செயல்பட தொடங்கியது. சுவிட்சர்லாந்தில் பெரும்பாலான பகுதிகளில் மைனஸ் 7 டிகிரி வெப்பம் நிலவுகிறது. ஜெனீவாவில் கடுமையான பனிப்பொழிவு பதிவாகி உள்ளது. அங்குள்ள விமான நிலையத்தை பனி மூடியதால் விமானங்களை இயக்குவது சவாலாக மாறி உள்ளது. ஓடுபாதை பனியால் மூடப்பட்டதுடன் வானிலையும் மோசமாக உள்ளதால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. சில மணி நேரங்களுக்குப் பின்னர் நிலைமை ஓரளவு சீரானதும் மீண்டும் விமான நிலையம் செயல்பட தொடங்கியது மேலும் […]