புதுச்சேரில் குழந்தை உட்பட மேலும் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி என அம்மாநில சுகாதாரத்துறை தகவல். புதுச்சேரியில் மேலும் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, புதுச்சேரியில் ஒரு குழந்தை உள்பட 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, 15 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று உறுதியான நிலையில், தற்போது மேலும் 6 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது. […]
புதுச்சேரியில் 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா, டெங்கு, ஃப்ளூ, பன்றிக் காய்ச்சல் போன்ற பல்வேறு வகையான காய்ச்சல்கள் பரவி வருகிறது. இந்த காய்ச்சல்களை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவியதால் மருத்துவமனைகளில் குழந்தைகள் அனுமதி அதிகரித்தது. பின்பு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து காய்ச்சல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த […]
கேரளாவின் கோழிக்கோட்டில் 12 வயது சிறுமி எச்1என்1 நோயால்(பன்றிக் காய்ச்சலால்) உயிரிழந்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்,இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோய் என்ற தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது.குறிப்பாக ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது அதிகளவு பரவி வருகிறது. […]
கோவையில் இரண்டு பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதியாகியுள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் தெரிவித்துள்ளார். கோவை : தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வருடமாக கொரோனா தொற்று பரவி வந்த நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதால் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால், டெங்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் சில […]
தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை பன்றிக்காய்ச்சலுக்கு 1020 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டு பலர் இறந்துள்ளனர். இதை தடுக்கும் நோக்கில் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் டெங்கு, பன்றிக் […]
பெங்களூரு: கர்நாடகாவில் 400பேரு க்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி உறுதி செய்யப்பட்டு ள்ளதாக கர்நாடக மாநிலசுகாதாரத் துறை அறிவித்து ள்ளது. இதில் பெங்களூரில் ஒரே வாரத்தில் 46பேருக்கு பன்றிக்காய்ச்சல் தாக்கி யிருப்பதாக கூறப்படுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கு டாமி புளூமாத்திரைகளை சுகாதாரத் துறை வழங்கியுள்ளது. பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவத் தொடங்கிஉள்ளதால் கர்நாடக மக்கள் அச்சமடைந்துள்ளனர். DINASUVADU
பருவ காய்ச்சலை தடுக்கும் வகையிலும் ,பன்றிகளில் உள்ள H1N1 வைரஸ் வகைகளால் உருவாகும் பன்றி காய்ச்சலை தடுக்கும் வகையில் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என டெல்லி மாநில சுகாதாரதுறைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது அம்மாநில அரசு. பன்றி காய்ச்சலின் அறிகுறிகளில் காய்ச்சல், இருமல், புண், தொண்டை, பலவீனம் மற்றும் உடல் வலிகள் ஆகியவை அடங்கும். குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயதானவர்கள் ஆகியோரை இக்காய்ச்சல் உடனடியாக கடுமையான தொற்றும் அபாயம் உள்ளது. இந்த பன்றிக்காய்ச்சலுக்கு வழக்கமான சிகிச்சை ஓய்வு, […]