கேரளாவின் கோழிக்கோட்டில் 12 வயது சிறுமி எச்1என்1 நோயால்(பன்றிக் காய்ச்சலால்) உயிரிழந்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்,இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோய் என்ற தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது.குறிப்பாக ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது அதிகளவு பரவி வருகிறது. […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் தற்போது பன்றிக் காய்ச்சல் மக்களிடையே மிகவும் அதிகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகினர். பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கு பிலிப்பைன்ஸ் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்துள்ளது. ஆயினும், அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனையடுத்து, நோய்க்கு காரணமான பன்றிகளை சொல்வதற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து, 20000 பன்றிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில், அவற்றின் 6600 பன்றிகள் நோயால் பாதிக்கப்பட்டவரை எனவும், மீதமுள்ள அனைத்தும் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக கொள்ளப்பட்டது என வேளாண் […]
நாடு முழுவதும் இதுவரை 542 பேர் பலியாகி உள்ளத்தாக மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு நாடு முழுவதும், நடப்பாண்டில் இதுவரை பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் 542 பேர் பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஹெச்1என்1’ வைரஸ் காய்ச்சல் பாதிப்பு குறித்த விபரங்களை தினமும் அனுப்பி வைக்க மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் மட்டும், 2017ம் ஆண்டில் 2,896 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் […]
பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த 20 லட்சம் மாத்திரைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள காய்ச்சல் வார்டுகளில் அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு காய்ச்சலை தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார் மற்றும் பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த 20 லட்சம் மாத்திரைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழ்நாடு மட்டுமல்லாமல் […]
இந்தியாவில் நுழைந்து வரும் பன்றிக்காய்ச்சல் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டறிந்தாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது இது பற்றி மகாராஷ்டிரா, ராஜஸ்தான் முதல்வர்களிடமும் கேரளா, தமிழ்நாடு, கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர்களிடமும் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா கேட்டறிந்தார். மேலும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்றும் ஜெ.பி.நட்டா உறுதியளித்துள்ளார். மேலும் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்டறிந்தேன் மேலும் […]