ஸ்வீடன் நாட்டைச்சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான கிரோட்டா தன்பர்க் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் காலநிலை மாற்றம் குறித்த போராட்டங்களால் கவனம் பெற்ற 17வயது சிறுமியான தன்பர்க் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கும் இவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டது. தன்பர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் சுற்றுச்சூழல் குறித்து கவலை கொள்ளும் அமெரிக்கர்கள் அனைவரும் ஜோ பைடனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பதிவிட்டு தனது ஆதரவை பைடனுக்கு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.