1971ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்றதன் பொன்விழாவை முன்னிட்டு,தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போரானது பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடந்தது.இப்போரில்,டிசம்பர் 16 ஆம் தேதி இந்தியாவும் முக்தி பாஹினியும் (வங்காளதேச விடுதலை இராணுவம்) வென்று வங்கதேசம் உருவாக்கப்பட்டது.அப்போது,சுமார் 90,000 பாகிஸ்தான் போர் வீரர்கள் சரணடைந்தனர்.மேலும்,இப்போரில்,இந்திய ராணுவ வீரர்கள் உட்பட 3 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. […]