மும்பையில் உள்ள குடியிருப்பு பகுதியில் காரை சிங்க்ஹோல் ஒன்று முழுவதும் விழுங்கியுள்ள வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. தற்போது அங்கிருக்கும் கட்கோபர் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வாகன நிறுத்துமிடத்தில் இருந்த நீல நிற கார் ஒன்று முழுவதுமாக சிங்க்ஹோலில் மூழ்கிய வீடியோ வைரலாகி வருகிறது. முதலில் இந்த காரின் முன்பகுதி சக்கரங்கள் உள்ளே சென்றது, அதனை தொடர்ந்து காரின் பின்பகுதியும் […]