பிரதமர் நரேந்திர மோடியின் “தூய்மை இந்தியா” திட்டம் என்பது தொலைக்காட்சிகளிலும் செய்திப் பத்திரிக்கைகளிலும் அரசு சார்பில் கொடுக்கப்படும் விளம்பரங்களில் மட்டுமே உள்ளது. அப்படிப்பட்ட விளம்பரங்களுக்காக அரசு இதுவரை 530 கோடி ருபாய் செலவழித்துள்ளது. மற்றபடி அடிப்படை முன்னேற்றம் ஒன்றுமே அந்த திட்டத்தால் மக்களுக்கு கிடைத்திடவில்லை என்பது எதிர்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் குற்றசாட்டாக உள்ளது.