இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு சீசன் இன்று மருத்துவ விருதுடன் தொடங்கியது. மருத்துவதற்கான நோபல் பரிசு ஸ்வீடனை சேர்ந்த ஸ்வான்டே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித பரிணாம வளர்ச்சியில் மரபியல் சார்ந்த ஆய்வில் சாதித்ததற்காக (மரபணுக்கள் மற்றும் மனித பரிணாம வளர்ச்சி பற்றிய அவரது கண்டுபிடிப்பு) ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஆல்ஃபிரட் நோபலின் விருப்பத்தின்படி, முந்தைய ஆண்டில் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய நன்மையை வழங்கியவர்களுக்கு நோபல் பரிசு வழங்கபடுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு சீசன் […]