Telangana: தேர்தல் விதி மீறல் காரணமாக 106 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்தது தேர்தல் ஆணையம். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்திருந்தது. அதன்படி, மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இந்த சூழல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாகவும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் […]
பல மல்யுத்த வீராங்கனைகள் மல்யுத்த சம்மேளனத்தில் தலைவராக இருந்த பிரிட்ஜ் பூஷன் சிங் மீது பாலியல் புகார் கூறினர். இதைத்தொடர்ந்து பிரிட்ஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த தேர்தலில் நிற்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையில் பிரிட்ஜ் பூஷன் சிங் நண்பருமான சஞ்சய் குமார் தேர்தலில் நின்றார். சமீபத்தில மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் தேர்தல் முடிவு வெளியானது. இதில் சஞ்சய் குமார் வெற்றி […]
கள்ளச்சாராயம் குடித்து 70க்கும் மேற்பட்டோர் பலியாகியதை அடுத்து 5 அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட். பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக ஆளும் அரசை, எதிர்க்கட்சிகள் விமர்சித்து குற்றச்சாட்டி வருகிறது. பீகார் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது என அம்மாநில முதலமைச்சர் தெரிவித்திருந்தார். குடித்தால் இறந்து விடுவீர்கள் என எச்சரித்தும், தொடர்ந்து அப்படி […]
கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி கல்விச் சான்றிதழ் அளித்து பணிபுரிந்து வந்த அலுவலக உதவியாளர் சஸ்பெண்ட். ராசிபுரத்தில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் முறையாக அனுமதி பெறாமல் மரங்களை வெட்டி குறைந்த விலைக்கு விற்ற புகாரில் கல்லூரி முதல்வர் எஸ்.பங்காரு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று, அரியலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 8ம் வகுப்பு படித்ததாக போலி கல்விச் சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்து 25 ஆண்டுகளாக வேலை பார்த்த அலுவலக உதவியாளர் ஜெயராமன் (57) […]
அரசு பொது மருத்துவமனையில் பணிக்கு வராமல் இருந்த 4 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்து அமைச்சர் உத்தரவு. மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் உரிய நேரத்தில் பணிக்கு வராமல் இருந் 4 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மருத்துவர்கள் பணிக்கு வராதது தெரிந்ததை அடுத்து 4 அரசு மருத்துவர்களையும் சஸ்பெண்ட் செய்து அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும், மருத்துவமனையை ஆய்வு செய்யாமல் இருந்த மாவட்ட […]
மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆணையர் கிறிஸ்துதாஸை சஸ்பெண்ட் செய்து ஆணையர் பிரகாஷ் உத்தரவு. மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆணையர் கிறிஸ்துதாஸை பணி இடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பால்வளத்துறை துணை ஆணையர் கிறிஸ்துதாஸ் நேற்று ஓய்வு பெற வேண்டிய நிலையில், பால்வள மேம்பாட்டு ஆணையர் பிரகாஷ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கிறிஸ்துதாஸ் மீது நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை முடிவடையும் வரை ஒய்வு பெற அனுமதி இல்லை என்றும் ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டார்.
கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் ரூ.3 கோடி ஊழல் என எழுந்த புகாரில் 4 பேர் பணியிடை நீக்கம். கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் ரூ.3 கோடி ஊழல் என எழுந்த புகாரில் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நெஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சத்யபாமா, உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் பூபாலன் சிங், கரூர் கோட்டை கணக்கர் பெரியசாமி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சாலை போடாமல் போடப்பட்டதாக கூறி அதிகாரிகள் துணையுடன் பணத்தை முறைகேடு செய்ததாக […]
திருவாரூர் பேரளம் பகுதியை சேர்ந்த பெண் கைதி கஸ்தூரி தப்பி ஓடிய விவகாரத்தில் 2 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பணியில் கவனக்குறைவாக இருந்த காவலர்கள் கோமதி, சத்யாவை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி விஜயகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். தப்பியோடிய பெண் கைதி கஸ்தூரியை மீண்டும் கைது செய்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பப்ஜி மதன் தொடர்பான ஆடியோ விவகாரத்தில் உதவி ஜெயிலர் செல்வம் பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி உத்தரவு. யூ -டியூப்பில் ஆபாசமான பேச்சுக்களை பேசி வீடியோக்களை பதிவிட்டு வந்த பப்ஜி மதனை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18-ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் மதன் மீது கடந்த ஜூலை மாதம் 6-ஆம் தேதி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் புழல் சிறையில் […]
கரூரில் சத்துணவு மையத்தில் குழந்தைகளுக்கு அழுகிய முட்டை வழங்கியதாக எழுந்த புகாரைத்தொடர்ந்து 3 பேர் சஸ்பெண்ட் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களும் மதிய உணவு மற்றும் முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் நாகனுரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட சத்துணவு முட்டைகள் அழுகி அதில் புழுக்கள் இருந்தததும், முட்டையில் ஒரு வித துர்நாற்றம் வீசியதையும் அடுத்து புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து சத்துணவு […]
பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலை பள்ளியில் உள்ள கட்டிடத்தில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் 4 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக அப்பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட மூவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து […]
பேருந்திலிருந்து என்னை இறக்கி விட்டவர்களை தண்டிக்க வேண்டாம், குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என பாதிக்கப்பட்ட செல்வமேரி அம்மா கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளைச்சலில் மீன் விற்பனை செய்து வரக்கூடிய செல்வம் எனும் மூதாட்டி மீன் விற்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக வானியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்பொழுது மூதாட்டியின் உடலில் துர்நாற்றம் வீசுவதாக கூறி பேருந்து நடத்துனர் அவரை கீழே இறங்கி விட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மூதாட்டி அந்த பேருந்து நிலையத்தில் நின்று அழுது கூச்சலிட்டுள்ளார். […]
பேருந்திலிருந்து மூதாட்டியை இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளைச்சலில் மீன் விற்பனை செய்து வரக்கூடிய செல்வம் எனும் மூதாட்டி மீன் விற்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக வானியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்பொழுது மூதாட்டியின் உடலில் துர்நாற்றம் வீசுவதாக கூறி பேருந்து நடத்துனர் அவரை கீழே இறங்கி விட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மூதாட்டி அந்த பேருந்து நிலையத்தில் நின்று அழுது கூச்சலிட்டுள்ளார். தான் நடந்து சென்று வீட்டை […]
சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைது செய்யப்பட்ட அசாம் காங்கிரஸ் எம்.எல்.ஏ கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள டரங் மாவட்டம் சிபஜ்கர் எனும் பகுதியில் ஆக்கிரமித்து வசித்து வரக்கூடிய மக்களை வெளியேற்றும் முயற்சியில் கடந்த மாதம் 23 ஆம் தேதி போலீசார் ஈடுபட்டனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். அதே போல கடந்த 1979 – 1985 வரை அசாமில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்காள தேசத்துக்கு மக்கள் வெளியேறுமாறு போராட்டம் […]
சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளி தப்பிக்க அலட்சியம் காரணமாக மூன்று போலீசார் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புனேவில் செப்டம்பர் 17 ஆம் தேதி நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 28 வயது நபரை வர்ஜே போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அடுத்த நாளே அந்த குற்றவாளி போலீஸ் காவலில் இருந்து தப்பினார். பின்னர் குற்றவாளியை நகரத்தில் உள்ள மதுபானக் கூடத்தில் இருந்து போலீசார் கைது செய்தனர். பாலியல் வன்கொடுமை குற்றவாளி தப்பிக்க […]
மத்தியப் பிரதேசத்தில் ஒரு பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தலைமை ஆசிரியர் எதிராக புகார் அளித்துள்ளனர். மத்தியப்பிரதேசத்தின் ராஜ்கரில் உள்ள ஒரு பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகள் பள்ளி சீருடை அணியாததற்காக பள்ளி தலைமை ஆசிரியர் கடந்த சனிக்கிழமை திட்டி உள்ளார். அப்போது தலைமை ஆசிரியர் மாணவிகளை நிர்வாணமாக பள்ளிக்கு வர சொன்னதாக மாணவிகள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், கடந்த சனிக்கிழமை பள்ளி சீருடை […]
மம்தாவின் திரிணாமுல் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்பி சாந்தனு சென் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது, நேற்று மாநிலங்களவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி,, உளவு பார்க்கும் விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து வந்தார். அப்போது, அந்த அறிக்கையின் நகலை அமைச்சரின் கையில் இருந்து பிடுங்கி, அதனை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி சாந்தனு சென் கிழித்தாக கூறப்படுகிறது. அமைச்சரின் கையில் இருந்து பிடுங்கி கிழித்த நகலை அவையின் துணை […]
கர்நாடகத்தில் ராய் டிசோசா என்னும் 50 வயது மனநல பாதிக்கப்பட்ட முதியவர் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக 8 காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கொடகு மாவட்டத்தில் வசித்து வரக்கூடியவர் தான் மனநலம் குன்றிய 50 வயது முதியவர் ராய் டிசோசா. இவர் ஊரடங்கு விதிகளை மீறி வெளியில் சென்றதற்காக காவலர்களால் நேற்று அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந் நிலையில் உயிரிழந்த டிசோசாவின் சகோதரர் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். […]
மதுரை வாடிப்பட்டியில் அதிமுக பிரமுகரின் பேக்கரியை அடித்து நொறுக்கிய திமுக துணை மாணவரணி செயலாளர். பேக்கரி விவகாரம் தொடர்பாக போரூர் திமுக செயலாளராக இருந்த பிரகாசம் கட்சியிலிருந்து நீக்கம். மதுரை வாடிப்பட்டியில் உள்ள அதிமுக பிரமுகருக்கு சொந்தமான பேக்கரி ஒன்று ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில் கையில் ஆயுதங்களுடன் அந்த பேக்கரி வாசலில் நுழைந்து திமுக மாணவரணி துணை செயலாளர் அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பேக்கரியில் போடப்பட்டிருந்த கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன் பேக்கரியில் […]
சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்த முட்டை திருடிய பஞ்சாபை சேர்ந்த தலைமை காவலர் தற்பொழுது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மக்களின் உயிர்காக்கும் காவல் துறை அதிகாரிகள் பல இடங்களில் பாராட்டுக்குரியவர்களாக இருந்தாலும் சில இடங்களில் மக்களுக்குப் பிடிக்காத சில விஷயங்களிலும் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒன்றாக கடை வைத்திருப்பவர்களிடம் தகராறு செய்து பொருட்களை இலவசமாக பெற நினைப்பது உள்ளிட்ட சில தவறான செயல்களில் சில காவலர்கள் ஈடுபடுகின்றனர். ஆனால் பஞ்சாபிலுள்ள சண்டிகர் ஃபதேகர் சாஹிப் அருகே […]