நடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் இருந்து மக்களவைக்குள் நேற்று அத்துமீறி உள்ளே நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அத்துமீறல் நடைபெற்றது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். மக்களவையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விளக்கம் கோரிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரேநாளில் கனிமொழி உட்பட 15 எம்பிக்கள் சஸ்பெண்ட்… மக்களவையில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! அந்த […]
விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மாநகராட்சியின் நகரமைப்பு ஆய்வாளர் தங்கமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கரூர் செல்லாண்டிபாளையம் பகுதியில் வீடு கட்டுமான பணி நடைபெற்று வரும்போது கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை செய்தபோது விஷவாயு தாக்கி சிவா, மோகன்ராஜ் உள்ளிட்ட 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விஷவாயு தாக்கி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலர், டிஜிபி ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என கூறி தேசிய மனித உரிமை […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது பணியிலிருந்த காவல் ஆய்வாளர் திருமலை பணியிடை நீக்கம். கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த […]
கழிவறை தொட்டியில் விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்தில் இரு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு. பேரூராட்சி கழிவறை (செப்டிக் டேங்) தொட்டியில் விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி, இளநிலை பொறியாளர் வீரமணி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். தேனி மாவட்டம் பண்ணைபுரம் பேரூராட்சியின் கழிவறை தொட்டியில் தவறி விழுந்து சிறுமிகள் சிறுவர் உயிரிழந்தனர். பண்ணைப்புரத்தில் 1-ம் வகுப்பு படித்து வந்த சுபஸ்ரீ (6), […]
உ.பி-யில் ஆசிரியைக்கு மாணவர் மசாஜ் செய்துவிட்ட வீடியோ வைரலானதையடுத்து, ஆசிரியர் சஸ்பெண்ட். உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் உள்ள அரசு பள்ளியை சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஊர்மிளா சிங் என்பவர் நாற்காலியில் அமர்ந்த வண்ணம், மாணவர் ஒருவர் அவருக்கு மசாஜ் செய்து விடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்த வண்ணம் அவரது கையை மாணவர் ஒருவர் மசாஜ் செய்து விடுகிறார். மற்ற மாணவர்கள், கீழ் அமர்ந்துள்ளனர். இந்த […]
மாநிலங்களவையில் இருந்து ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்ட் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்பி விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மாநிலங்களவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய காரணத்தால், திமுக எம்.பி.க்கள் என்.ஆர்.இளங்கோ, அப்துல்லா, சண்முகம், கிரிராஜன், கனிமொழி சோமு […]
மூடிமறைக்கப்படும் அக்கிரமங்களை வெளிக்கொணர, போராடுவதற்காகத்தானே எதிர்க்கட்சிகள்! சீனாவைப்போல எதிர்க்கட்சியே வேண்டாமா? என பீட்டர் அல்போன்ஸ் ட்வீட். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்பி விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மாநிலங்களவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய காரணத்தால், திமுக எம்.பி.க்கள் என்.ஆர்.இளங்கோ, அப்துல்லா, சண்முகம், […]
பாஜக பிரமுகர் பாலசந்தர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதுகாவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவர் பாஜக பட்டியலின பிரிவு தலைவராக உள்ளார். இந்நிலையில் இவர் நேற்று இரவு அவரது பாதுகாப்பு காவலர் பிஎஸ்ஓ பாலகிருஷ்ணன் சித்தாதரிபேட்டை சாமி நாயக்கர் தெருவுக்கு சென்று அங்கு தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரது காவலர் பாலகிருஷ்ணன் அருகிலிருந்த டீக்கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார். இதனையடுத்து இரு சக்கர வாகனத்தில் வந்த 6 […]
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் மாற்றுத்திறனாளியை தாக்கிய 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மது விற்பனை குறித்து கண்பார்வையற்ற இளைஞர் சங்கர் தொடர்ந்து புகார் அளித்ததால் காவலர்கள் அவரை லத்தியால் தாக்கியுள்ளனர். மாற்றுத்திறனாளியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கடுமையாக தாக்குதல் நடத்தியதாக குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. கண்பார்வையற்ற சங்கரை அழைத்துசென்று லத்தியால் தாக்கிய புகாரில் 3 போலீசார் மீது எஸ்.பி நிஷா பார்த்திபன் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, செந்தில், அசோக், பிரபு ஆகிய 3 போலீசாரை […]
நாகர்கோவில்:நரிக்குறவர் குடும்பத்தினரின் உடமைகளை வெளியில் போட்டு,தாய்,தந்தை,குழந்தை ஆகியோரை பேருந்திலிருந்து இறக்கி விட்ட ஓட்டுநர்,நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்படுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் எனும் மீன் விற்கும் தாயாரை கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக பேருந்தில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் பெருமளவில் பேசப்பட்டது. தாயார் தனது மனக்குமுறலை பேருந்து நிலையத்தில் கதறலாக கூறிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகிய நிலையில் முதல்வர் உள்ளிட்ட பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். மேலும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட பேருந்து […]
சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை ஜனவரி 31, 2022 வரை ஒரு மாதம் நீட்டித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுநோய் பரவுவதைக் கருத்தில் கொண்டு சர்வதேச பயணிகள் விமானம் கடந்த ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டன. இருப்பினும், கடந்த ஆண்டு மே 2020 முதல் வந்தே பாரத் மிஷன் மற்றும் கடந்த ஆண்டு ஜூலை முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுடன் கீழ் சிறப்பு சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன. சர்வதேச விமானங்கள் […]
ஓய்வுபெறும் நாளில் அரசுப் பணியாளர்கள் தற்காலிகப் பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறையை நீக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஓய்வுபெறும் நாளில் அரசுப்பணியாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்யும் நடைமுறையை நீக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் இதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்,இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: “அரசு ஊழியர் ஆசிரியர் பணி சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்து, 07.09.2021 அன்று […]
மகளை பள்ளியில் சேர்க்க வந்த பெண்ணை மசாஜ் செய்ய பயன்படுத்திய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட். ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் லோகேஷப்பா. இந்நிலையில், பெண் ஒருவர் தனது மகளுக்கு சேர்க்கை கேட்டு பள்ளியில் லோகேஷப்பாவை அணுகி உள்ளார். அப்போது, அந்தப் பெண் ஒரு அழகு நிலையத்தில் பணிபுரிந்ததை அறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் லோகேஷப்பா, அவருக்கு மசாஜ் செய்யும்படி அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்தப் பெண் அவருக்கு […]
குடிசைமாற்று வாரிய உதவி பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை, புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்பு கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சு உதிர்வது குறித்து,அங்கு சமீபத்தில் குடியேறிய பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். சுமார் ரூ.112 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடம், கடந்த 2016-ல் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் 864 வீடுகள் இருக்கின்றன. குற்றசாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து, அமைச்சர்கள் சேகர்பாபு, […]
மஹாராஷ்டிராவில் சட்டசபை தலைவரை தகாத வார்த்தைகளால் பேசிய 12 பாஜக எம்எல்ஏ-க்கள் ஒரு ஆண்டிற்கு சஸ்பெண்ட். இன்று முதல் 2 நாட்களுக்கு மகாராஷ்டிரா சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், சபாநாயகர் பதவியில் இருந்த பட்டோலி ராஜினாமா செய்ததால் இடைக்கால சபாநாயகராக பாஸ்கர் ஜாதவ் செயல்பட்டு வருகிறார். இதனையடுத்து, சட்டசபையில் மாநிலங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், சபாநாயகர் சட்டசபை சிறிது நேரம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். […]
தேனாம்பேட்டையில், தடையை மீறி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை தடுக்க தவறியதாக காவல் ஆய்வாளர் முரளி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்-6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இன்று காலை முதல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியது. இதில், தற்போதைய நிலவரப்படி, திமுக 149 இடங்களிலும், அதிமுக 84 இடங்களிலும், மநீம ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது. இதனையடுத்து, இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், திமுகவினர், தற்போது இருந்தே தங்களது வெற்றியை கொண்டாடி வருகின்றனர். அந்த […]
பெண் எஸ்.பி.யை மிரட்டிய புகாரில் வழக்குப் பதிவுக்கு ஆளான எஸ்.பி. கண்ணன் சஸ்பெண்ட் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அண்மையில் முதல்வர் டெல்டா மாவட்ட சுற்றுப்பயணம் சென்றபோது சட்டம் ஒழுங்குப் பிரிவில் சிறப்பு டி.ஜி.பியாக இருக்கக்கூடிய ராஜேஷ் தாஸ் பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறி அந்த பெண் எஸ்.பி டி.ஜி.பி மற்றும் உள்துறைச் செயலாளர் ஆகியோரைச் சந்தித்து ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் அளித்தார். பெண் ஐ.பி.ஸ் அதிகாரி கொடுத்த பாலியல் புகாரின் […]
தாடி வளர்த்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர். உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தை சேர்ந்தவர் இந்த்சர் அலி. இவர் அந்த மாவட்டத்தில் உள்ள ரமலா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் நீண்ட தாடி வைத்து அந்த தாடி உடனே வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் சிங் இவரை திடீரென சஸ்பெண்ட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட காவலர் விதிமுறைகளை மீறி உரிய அனுமதியின்றி தாடி வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் […]
ஊழல் குற்றச்சாட்டில் ஹோம் கார்ட் அதிகாரியை பதவி நீக்கம் செய்த முதல்வர் யோகி ஆதித்யநாத். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஊழல் குற்றச்சாட்டில் ஹோம்கார்ட்ஸ் துறையின் மாவட்ட தளபதியை பதவி நீக்கம் செய்ய கோரி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஹோம்கார்ட்ஸ் துறையின் மாவட்ட தளபதி முகேஷ் குமார், புலந்த்ஷாரில் பதவியேற்றபோது ஊழலில் ஈடுபட்டதாக அவரை பதவி நீக்கம் செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை அறிக்கையின் படி, […]
ஊராட்சி மன்ற தலைவர் தரையில் அமர வைக்கப்பட்ட விவகாரத்தில், ஊராராட்சி மன்ற செயலாளர் சஸ்பெண்ட். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குதிட்டை பெண் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரி. இவர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த ஜூலையில் நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இவர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் […]