திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்தடையால் ஆக்சிஜன் விநியோகம் தடைபட்டு இரண்டு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். கொரோனா மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரக்கூடிய திருப்பூர் அரசு மருத்துவமனையில் இன்று 3 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது. அதன் காரணமாக நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் தடைபட்டதால், இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மருத்துவமனை முதல்வரிடம் விளக்கம் கேட்டபோது இருவரும் உடல்நல பாதிப்பு காரணமாகவே உயிரிழந்ததாக கூறியுள்ளார். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் […]