டிவி தொகுப்பாளரும், நடிகருமான சுரேஷ் ரவி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் காவல்துறை உங்கள் நண்பன், இந்த படத்தை ஆர்டிஎம் என்பவர் இயக்கி உள்ளார். பிரவீனா கதாநாயகியாக நடிக்கிறார். மைம் கோபி காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை லிப்ரா பட நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார். இந்த டீசரில் ஒரு தம்பதியினர். அவர்களுக்கு காவல்துறை அதிகாரியினால் ஏற்படும் விளைவுகள் என காட்டப்பட்டுள்ளது. இதன் வசனங்கள் வெகுவாக கவர்கிறது. […]