சூரத் : பாலில் உள்ள ஸ்ரீபாத் செலிப்ரேஷன்ஸ் பகுதியில் 7-வது மாடி பால்கனியில் இருந்து விழுந்து இரண்டு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் சூரத்தின் பாலில் பகுதியில் பெரிய கட்டடம் ஒன்று இருக்கிறது. இந்த கட்டடத்தின் 7-வது மாடியில் இருந்து இரண்டு வயது சிறுவன் விளையாடி கொண்டு இருந்த போது கீழே விழுந்து உயிரிழந்தான். உயிரிழந்த அந்த சிறுவன் பவ்யா கல்சாரியா என்று தெரிய வந்துள்ளது. குழந்தையின் தாய் மற்றும் […]
Election2024 : குஜராத் மாநிலம் சூரத் நகரில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் மக்களவை தேர்தலில் போட்டியின்றி தேர்வாகினார். நாடாளுமன்ற தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை ஏப்ரல் 19ஆம் தேதியன்று முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதியில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வரும் ஏப்ரல் 26இல் இரண்டாம் கட்ட தேர்தலும், மே 7ஆம் தேதி 3ஆம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது. அடுத்தடுத்து ஜூன் 1ஆம் தேதியன்று 7ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவுடன் மக்களவை தேர்தல் நிறைவடைந்து ஜூன் […]
உள்ளூர் மொழிகளும், இந்தி மொழியும் நமது கலாச்சார ஓட்டத்தின் முதன்மையானவை என அமைச்சர் அமித்ஷா பேச்சு. நமது கலாச்சாரம், வரலாற்றின் ஆன்மாவை புரிந்துகொள்ள நமது அலுவல் மொழியான இந்தியை கற்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்று வரும் இந்தி தின நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, உள்ளூர் மொழிகளும், இந்தி மொழியும் நமது கலாச்சார ஓட்டத்தின் முதன்மையானவை. நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் ஆன்மாவைப் புரிந்து கொள்ள […]
குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தை தொடர்ந்து சூரத் , ராஜ்கோட்,வடோதராவில் இன்று முதல் ஒவ்வொரு நாளும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது . கடந்த 24 மணி நேரத்தில் குஜராத் மாநிலத்தில் புதிதாக 1,420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,94,402-ஆக உயர்ந்துள்ளது.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கடந்த வியாழக்கிழமை, அகமதாபாத்தில் இன்று இரவு 9 மணி […]
சூரத்தில் இரண்டு வீடுகளின் பல்கனி இடிந்து விழுந்ததில் மூவர் பலியாகியுள்ளனர். சூரத் நகரில் உள்ள இரண்டு வீடுகளில் உள்ள பால்கனி இடிந்து விழுந்ததால் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அதிக மழை மற்றும் காற்று காரணமாக வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பால்கனி நிழலில் கீழே தூங்கி உள்ளனர். இந்நிலையில் அதிகாலை 4 மணியளவில் நேற்று இரண்டு குடியிருப்புகளின் பால்கனியும் ஒன்றாக இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினரை தேடும் முயற்சியில் தற்போது காவல்துறையினர் […]
சூரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை அடுத்து இரண்டு புதிய மருத்துவமனைகளை கொரோனா நோயாளிகளுக்காக மாற்றுவதாக முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை, சூரத்தில் கொரோனா வைரஸ் குறித்த நிலைமையை ஆய்வு செய்த முதல்வர் விஜய் ரூபானி மற்றும் மாநில துணை முதல்வரான நிதின் படேல், செய்தியாளர்களிடம் பேசிய போது, ஜூன் 20 முதல் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனையடுத்து ஜூன் 29 முதல் சராசரியாக 200-க்கும் மேற்பட்டோர் கொரனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார். […]
குஜராத்தைச் சேர்ந்த ரோமா ஷா இளம்பெண் மாஸ்கோவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். கடந்த ஆண்டு அவர் வென்ற பதக்கங்களை சேர்த்தால், இதுவரை 8 தங்கப் பதக்கங்களையும், 2 வெள்ளிப் பதக்கங்களையும் குவித்திருக்கிறார். குஜராத்தைச் சேர்ந்த ரோமா ஷா கணினி பொறியியல் படிப்பை படித்து வருகிறார். இவர் பளு தூக்குவது ஆண்களுக்கு மட்டுமானது அல்ல, பெண்களும் பளு தூக்கலாம் என நிரூபித்த பெண். ரோமா ஷா அண்மையில் மாஸ்கோவில் நடைபெற்ற 2019-ம் ஆண்டுக்கான உலக […]
இந்தியா முழுவதும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் இந்த நவராத்திரி விழா அதிக கொண்டாட்டத்துடன் இருக்கும். தென்மாநிலங்களில் அநேக இடங்களில் நவராத்திரி விழா கொண்டாடப்படும். இந்த நவராத்திரி விழாவிற்க்காக தற்போது குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரில் உள்ள பெண்கள் வித்தியாசமான முறையில் தயாராகி வருகின்றனர். அதாவது, அவர்கள் தங்கள் முதுகில் பல்வேறுவிதமான சமூக அக்கறை கொண்ட டாட்டூக்களை வரைந்து வருகின்றனர். இந்த டாட்டூக்களில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டமான […]
சாலையில் எச்சில் துப்பியவருக்கு வினோத தண்டனை வழங்கியுள்ளது சூரத் நகராட்சி. சூரத்தில் சாலைகள் மற்றும் பொது இடங்களில் சிறுநீர் கழித்தல் மற்றும் எச்சில் துப்புதல் போன்ற அசுத்த செயல்களில் ஈடுபடுவோருக்கு சூரத் நகராட்சி வினோதமான தண்டனைகளை வழங்கி வருகிறது. அவர்களுக்கு மன்னிப்பு என்ற வார்த்தைக்கு இடமில்லாமல் அபராதம் விதித்தல் மற்றும் வினோத தண்டனைகளை வழங்குகிறது. இதனால் பொதுமக்கள் சற்று விதிகளை கடைபிடிக்க தொடங்கியுள்ளனர் . கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களில் இளைஞர் ஒருவர் தோப்புக்கரணம் போடும் […]
குஜராத் மாநிலத்தில் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் . குஜராத் மாநிலம் சூரத் நகரில் சர்தானா பகுதியில் பயிற்சி மையம் ஓன்று உள்ளது.அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் 15பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.18 வாகனங்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர் .மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என சூரத் காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
குஜராத் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் மற்றும் கட்சிகளின் பேரணி பொது கூட்டம் என கலக்கி வரும் வேளையில் படேல் சமூகத்திற்கு இடஒதுக்கீடு கேட்டு போராடி வரும் குஜராத்தின் இளம் அரசியல் தலைவராக உருவெடுத்து வருகிறார் ஹர்திக் படேல் .இவர் இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதால் இவருக்கான ஆதரவு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.இதனையடுத்து அவர் நேற்று சூரத் நகரில் மாலை நடத்திய பேரணியில் சுமார் பல்லாயிரக்கணக்கான மக்களும் ,வாலிபர்களும் பங்கேற்றுள்ளனர். இவர் தான் தற்போது ஆண்டுகொண்டிருக்கும் பிஜேபிக்கும்,எதிர்க்கட்சியான காங்கிரஸ் […]