தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி கடந்த 2018-ஆம் ஆண்டு தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூட நடவடிக்கை எடுத்த நிலையில், இதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்திருந்தது. இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கு தொடரப்பட்டது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் திறக்க கோரிய […]
பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுவித்த குஜராத் மாநில அரசின் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி கூட்டு […]
அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது பற்றி முதல்வரே முடிவு செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல்.ரவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதன்படி, அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்போது, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரமில்லை. அதாவது, ஒரு […]
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதன்பின், காவலில் எடுத்து செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றங்கள் மறுப்பு தெரிவித்து வருகிறது. செந்தில் பாலாஜி 13 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில் […]
பொன்முடி கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியின்போது உயர்கல்வி மற்றும் கனிம வள அமைச்சராக இருந்தார். அப்பொழுது ரூ.1.72 கோடி அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவியை விசாலாட்சி மீதும் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. அப்போது நீதிபதி சுந்தரமூர்த்தி இந்த வழக்கில் பொன்முடி, விசாலாட்சி […]
இந்திய தொழிலதிபர் அதானி குறித்தும், பங்குசந்தை விவரம் குறித்தும் அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த ஆண்டு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், பங்குச்சந்தையை அதானி குழுமம் முறைகேடாக பயன்படுத்துகிறது என குற்றம் சாட்டியது. அதாவது, அதானி நிறுவனம் தங்களது நிதி நிலையை மறைத்து, பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் சம்பாதிப்பதாக கூறியிருந்தது ஹிண்டன்பர்க் நிறுவனம். இந்த விவகாரம் பூதகரமாக வெடித்தது. இதனை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றம் வரை எடுத்து சென்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]
அலகாபாத், ராஜஸ்தான், கவுகாத்தி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மற்றும் ஜார்கண்ட் ஆகிய உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலிஜியம் இது தொடர்பான பரிந்துரைகளை நேற்று மாலை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதன்படி, அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி அருண் பன்சாலியை நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை […]
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அங்கீகாரம் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதாவது, பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீது மூன்று வகையான தீர்ப்புகள் வழங்கப்பட்டது. அதில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தனி தீர்ப்பு நீதிபதி கவாய், சூர்ய காந்த், சஞ்சீவ் கண்ணா தனி தீர்ப்பு மற்றும் நீதிபதி கவுல் தனி தீர்ப்பு வழங்கினர். தீர்ப்பில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது […]
கைதிகள் விடுதலை தொடர்பான மனுக்கள் குறித்து தமிழ்நாடு ஆளுநர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, கோவையை சேர்ந்த சிக்கந்தர் உள்ளிட்ட 3 பேரை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய வழக்கில் தமிழக அளுநர் ஆர்என் ரவி பதலளிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கோவையை சேர்ந்த சிக்கந்தர் உள்ளிட்ட 3 பேரை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசு கூறியதாவது, கைதிகள் விடுதலை தொடர்பான அரசு அனுப்பிய கோப்புகளின் மீது […]
இந்திய சட்டப்பிரிவு 370இன் படி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கப்பட்டது. அம்மாநிலத்தில் சொத்து பரிமாற்றங்கள் அம்மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே நிர்வகிக்க முடியும் இந்திய சட்டங்கள் அங்குள்ள சட்டப்பேரவையில் ஒப்புதல் பெற்ற பிறகே அமல்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அந்த சட்டத்தின் கீழ் செயல்பாட்டில் இருந்தன. இதனை கடந்த 2019ஆம் ஆண்டு ஆளும் பாஜக அரசு ரத்து செய்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது […]
கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று, ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370 வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது, மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் இந்த அறிவிப்பை ஜம்மு காஷ்மீர் சட்டசபை ஒப்புதல் இன்றி அவர் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து […]
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்புடைய டெண்டர் முறைகேடு வழக்கில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் முதலமைச்சல் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் விசாரணையை நடத்த அனுமதிக்க வேண்டும், முந்தைய […]
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்காக உள்துறை அமைச்சகத்தின் மூலம் குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளார் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றசாட்டியுள்ளார். சென்னையில் செய்தியார் சந்திப்பில் பேசிய அமைச்சர், ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்காகவே மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்புகிறார் ஆளுநர். தன்னிடம் இருக்கும் அதிகாரம் பறிபோய் விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஆளுநர் செயல்படுகிறார். துணைவேந்தரை நியமிக்கக்கூட மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கக்கூடாது என நினைப்பது எந்த வகையில் நியாயமாக […]
தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் (பாஜக ஆளாத மாநிலங்கள்) ஆளுநருக்கும் , ஆளும் மாநில அரசுக்குமான நிர்வாக ரீதியிலான மோதல்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அந்தந்த குறிப்பிட்ட மாநிலங்கள் சார்பாக ஆளுநர்களுக்கு எதிராக வழக்கு நடைபெற்று வருகிறது. கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் , கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என கூறி கேரள அரசு […]
தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 1996-2001 ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் இந்த 4 அமைச்சர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் தெரிவித்து, அடுத்து வந்த அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் அனைவரையும் […]
அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் பெற மனுதாக்கல் செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்சநீதிமன்றம் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அதன் பிறகு அவர் பொறுப்பு வகித்து வந்த மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை ஆகிய துறைகள் மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கி […]
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பாக சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையின் போது அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜிக்கு இதய ரத்த குழாயில் […]
பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக அம்மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதாவது, பஞ்சாப் மாநில சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் மாநில ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த சில நாட்களாக உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மார்பு முன்பு நடைபெற்று வருகிறது. அப்போது, பஞ்சாப் மாநில தரப்பு மற்றும் ஆளுநர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் […]
உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும், தமிழக முன்னாள் ஆளுநருமான நீதிபதி பாத்திமா பீவி (96) காலமானார். கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை உயிரிழந்தார். பாத்திமா பீவி ஏப்ரல் 30, 1927 அன்று கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் பிறந்தார். இவர் திருவனந்தபுரம் மகளிர் கல்லூரியில் வேதியியலில் பட்டம் பெற்றார். பின்னர் திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் முதல் வகுப்பில் தங்கப் பதக்கத்துடன் பட்டம் பெற்றார். 1950-ஆம் ஆண்டு நவம்பர் 14 […]
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆளுநர் அனுமதி மறுக்கும் மர்மம் என்ன? என்றும் இதன் பின்னணியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளாரா? எனவும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ஜோதிமணி எம்பி கூறியதாவது, அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் விஜயபாஸ்கர், பிவி ரமணா, எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் வீரமணி ஆகிய 4 பேர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசு, ஆளுநர் […]