உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர்களான முலாயம் சிங்கும், அகிலேசும் அரசு பங்களாக்களைக் காலி செய்யக் கால நீட்டிப்புக் கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர். முலாயம்சிங்கும் அவர் மகன் அகிலேசும் முதலமைச்சராக இருந்தபோது குடியேறிய அரசு பங்களாக்களை இன்னும் காலி செய்யவில்லை. இருவரும் அரசு பங்களாவைக் காலி செய்ய மாநில அரசிடம் 2 ஆண்டு காலக்கெடு கேட்டனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் அரசு பங்களாக்களைக் காலி செய்ய உத்தரவிடக் கோரி லோக் பிரகாரி என்கிற அரசுசாரா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு […]