நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளின் விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பில்,அனைத்து நீதிமன்றங்களின் நிகழ்வுகளை நேரலை செய்யலாம் என்று உத்தரவிட்டுள்ளது.மேலும் வழக்குகள் விசாரணையை இனி நேரடி ஒளிபரப்பு செய்ய சம்மதம் தெரிவித்துள்ளது.வழக்கு விசாரணையை ஒளிபரப்ப போதுமான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
காவிரி விவகாரம் குறித்து அணைத்து கட்சி கூட்டத்தில் முக்கியமான மூன்று முடிவுகள் எடுக்கப்பட்டன.அதில், இன்னும் ஆறு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும். தண்ணீர் அளவை 192 டி.எம்.சியில் இருந்து 177 டி.எம்.சியாக குறைத்ததை பற்றி எதிர்க்கட்சிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை பெற்று முன்னெடுத்து செல்ல வேண்டும். அனைத்து கட்சி கூட்டத்தில் விவசாயிகளையும் சேர்த்து விரைவில் பிரதமரிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தவேண்டும் . […]