டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அண்மையில் ஓர் புயலை கிளப்பினார். இந்த விவகாரம் இந்தியா முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இப்படியான சூழலில், திருப்பதி லட்டு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும், முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திரா மாநில அரசு மீது […]
டெல்லி : நேற்று உச்சநீதிமன்ற தலைமை வளாகத்தில் தேசிய நீதித்துறை அருங்காட்சியகத்தை (NJMA) தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார். அந்த அருகாட்சியகம் குறித்து சந்திரசூட் கூறுகையில், ” இந்த அருங்காட்சியகம் நமது தேசத்தில் நீதிமன்றத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. இந்த அருங்காட்சியகம் தற்போது தேசத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது.” எனக்கூறி, ” நீதியை வழங்குவதில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார். அந்த நீதிமன்ற அருங்காட்சியகத்தில் AI தொழில்நுட்ப உதவியுடன் ஒரு டிஜிட்டல் வழக்கறிஞர் திரை ஒன்று அறிமுகம் […]
சென்னை : தமிழக அரசியலில் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த ‘துணை முதலமைச்சர்’ பதவி குறித்த கேள்விக்கு நேற்று முன்தினம் பதில் கிடைத்தது. தமிழகத்தில் 3வது துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். ஏற்கனவே, கடந்த 2009ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் கலைஞர் மு.கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பில் இருக்கும் போது அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு முதன் முறையாக கொடுக்கப்பட்டது. 3வது முறையாக துணை முதல்வர் : அடுத்ததாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா […]
சென்னை : புழல் சிறையிலிருந்து நேற்று மாலை நிபந்தனை ஜாமீனில் வெளிய வந்த செந்தில் பாலாஜிக்கு திமுக தொண்டர்கள் கொண்டாடி உற்சாக வரவேற்பை கொடுத்தனர். அவரது வருகைக்கு பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மேலும் மலர் தூவியும் கொண்டாடி செந்தில் பாலாஜியை வரவேர்த்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி, முதல் விஷயமாக மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களுக்குச் சென்று மலர் தூவி மரியாதையை செலுத்தினர். முன்னதாக, தனியார் பத்திரிகைக்கு பேட்டி […]
சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக புழல் சிறையில் இருந்து நேற்று மாலை செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தார். அவருக்கு புழல் சிறை வாசலிலேயே திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். மேலும், வெளியில் வந்தவுடன் நேராக சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதையை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து இன்று காலை சிறைவாசம் சென்று வந்த செந்தில் பாலாஜியை […]
சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த 2023 ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதன்பிறகு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார் செந்தில் பாலாஜி. அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பின்னர், ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடினார் செந்தில் பாலாஜி. அங்கு விசாரணை முடிவடைந்து, நேற்று செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். ரூ.25 லட்சத்திற்கு 2 பிணை உத்தரவாதங்கள் , […]
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை அடுத்து, புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி இன்று மாலை விடுதலைச் செய்யப்பட்டார். இந்த நிலையில், அவர் விடுதலையானதை தொடர்ந்து திமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வந்தனர். திமுக தொண்டர்களின் வெற்றி கோஷங்களுக்கு இடையே புழல் சிறையில் இருந்து வெளியில் வந்த செந்தில் பாலாஜி அடுத்து என்ன செய்வார், எங்கு செல்வார், […]
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின்னர் அந்த ஜாமீன் உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, 2 பேரின் பிணை உத்தரவாதங்கள் அளித்ததை அடுத்து, புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்க நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியின் உத்தரவையடுத்து, தற்போது செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வெளியில் வந்தார். அவரை திரளான திமுக தொண்டர்கள் […]
சென்னை : 471 நாட்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த 2023 ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து, இந்த வழக்கில் இருந்து ஜாமீன் கேட்டு, செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு விண்ணப்பித்திருந்தார். ஆனால், அந்த ஜாமீன் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படவே , அதன் பின்னர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு […]
சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ரூ.25 லட்சத்திற்கு 2 நபர்கள் பிணை உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றும், வழக்கிற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதித்து ஜாமீன் வழங்ப்பட்டது. இதனை அடுத்து அமலாக்கத்துறை வழக்கு நடைபெற்று வரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது, நீதிபதி முதலில் , “உச்சநீதிமன்ற தீர்ப்பில் குழப்பங்கள் உள்ளது. […]
சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த 2023 ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் மனு அளித்திருந்தார். இரு நீதிமன்றங்களிலும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் அபெய் எஸ்.ஓகா மற்றும் […]
சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த 2023 ஜூன் மாதம் கைதாகியிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு , உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. ரூ.25 லட்சத்திற்கு பிணை, ஆமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்து என பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. மேலும், செந்தில் பாலாஜி மீண்டும் தமிழ்நாடு அமைச்சராக நியமனம் செய்வபடுவதற்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை என்று அவரது வழக்கறிஞர் இளங்கோ செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இதனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய அமைச்சரவை மாற்றம் விரைவில் அறிவிக்கப்படும் […]
சென்னை : அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சுமார் 471 நாட்கள் விசாரணையில் இருந்து வந்த செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் இன்று காலை நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை தொடர்ந்து இன்று மாலை அல்லது நாளை காலை செந்தில் பாலாஜி வெளியில் வரவுள்ளார். இதனைத் தொடர்ந்து, 15 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வரும் செந்தில் பாலாஜிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ஆருயிர் சகோதரர் […]
சென்னை : 2011 – 2016 காலகட்டத்தில் அதிமுக அமைச்சரவையில் இருந்த செந்தில் பாலாஜி , போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கியதாக அவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் புகார் பதிவு செய்தனர். இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி கடந்த 2023 ஜூன் மாதம், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். பல மாதங்களாக அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு முதன்மை […]
டெல்லி : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த 2023 ஜூனில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஓராண்டுக்கு மேலாக அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் இருக்கும் செந்தில் பாலாஜி, ஜாமீன் கேட்டு சிறப்பு நீதிமன்றம், உயர்நீதிமன்றங்களை நாடினார். அங்கு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன இதனை அடுத்து, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பு மனு அளித்து இருந்தது. இந்த ஜாமீன் வழக்கானது, நீதிபதிகள் அபெய் எஸ்.ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிக் […]
சென்னை : பெண்காவலர்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் யூ-டியூபில் கருத்து தெரிவித்ததற்காக யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. அவர் மீது கஞ்சா வைத்திருந்த வழக்கும் பதியப்பட்டது. இந்த வழக்குகளை அடுத்து சென்னை காவல் ஆணையர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தை பதிவுசெய்தார். இந்த குண்டர் சட்டமானது முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீக்கம் செய்யப்பட்டது. இதனை அடுத்து, சவுக்கு சங்கர் மீது தேனி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் வழக்கின் கீழ் மீண்டும் […]
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி அவர் மீது போக்ஸோ வழக்கு பதியப்பட்டு இருந்தது. இந்த போக்ஸோ வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அந்த இளைஞர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். குழந்தைகளின் ஆபாச படத்தை அந்த இளைஞர் தன் மொபைல் போனில் வைத்திருந்தார். ஆனால் , அதனை யாருடனும் பகிரவில்லை என்ற அந்த இளைஞர் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டு போக்ஸோ வழக்கை […]
டெல்லி : ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதலில் அமலாக்கத்துறையினர் கைது செய்து இருந்தனர். அடுத்ததாக இதே வழக்கில் சிபிஐ விசாரணை குழுவினரும் கைது செய்தனர். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட வழக்கில், கெஜ்ரிவாலுக்கு முன்னதாக ஜாமீன் வழங்கப்பட்டு இருந்தாலும், சிபிஐ வழக்கில் அவர் கைதாகி இருந்ததால் கெஜ்ரிவால், டெல்லி திகார் சிறையிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், சிபிஐ பதிவு செய்திருந்த வழக்கில் ஜாமீன் […]
கொல்கத்தா : ஆர்.ஜி கர் மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் 31 வயதான பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணை குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சஞ்சய் ராய் எனும் தன்னார்வலர் மட்டுமே கைது செய்யப்பட்டுளளார். மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் இந்த வழக்கின் விசாரணை வளையத்தில் உள்ளார். இவ்வழக்கில் இன்னும் குற்றவாளிகள் உறுதிசெய்யப்படவில்லை. பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டும், மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தியும் நாடு […]
கொல்கத்தா : கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கர் மருத்துக்கல்லூரி, மருத்துவமனையில் 31 வயதான பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையின்போது , இந்த வழக்கை விசாரணை செய்து வரும் சிபிஐ தங்கள் விசாரணை அறிக்கையை இன்று தாக்கல் செய்துள்ளனர். தற்போது வரையில் […]