வருகின்ற நவம்பர் 17ம் தேதியுடன் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பணி காலம் முடிவடைகிறது. இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக ஏஸ்.ஏ பாப்டேவை நியமிக்க ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்துள்ளார். எனவே, ஏஸ்.ஏ பாப்டே வருகின்ற நவம்பர் 18ம் தேதி உச்சநீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். இவரது பதவிக்காலம் ஏப்ரல் 23, 2021ம் ஆண்டு வரை நீடிக்கும் என அறிவிக்கப்படுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்திருந்த தஹில் ரமானியை மேகாலயா நீதிமன்ற நீதிபதியாக மாற்றியும், மேகாலயா நீதிமன்ற நீதிபதியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றியும் நீதிபதி நிர்ணயிக்கும் கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்து இருந்தது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தாஹில் ரமானி சென்னை தனது உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை ராஜினாமா செய்து, சென்னையில் குடியேறியுள்ளார். இந்நிலையில் இவர் அண்மையில் வாங்கிய அடுக்குமாடி குடியிருப்புகளில் 2 வீடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்ற […]
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது , இதற்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இதுகுறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பாப்டே தலைமையிலான விசாரணை குழுவை அமைத்தது. அந்த விசாரணை மாறைமுகமாக நடைபெற்றது. தற்போது அந்த குழு தங்களது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் உச்சநீதிமன்ற நீதிபதி மீதான பாலியல் வழக்கில் போதிய ஆவணங்கள் இல்லை என குறிப்ப்பிட பட்டிருந்தது.இதனால், நீதிபதி பாப்டே தலைமையிலான வழக்கு […]