புதிய நாடாளுமன்ற கட்டத்திற்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழ், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த நவம்பா் மாதம் 5-ஆம் இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம்தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் இரண்டு நீதிபதிகள் கட்டடப் பணிக்கு அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கினர். புதிய நாடாளுமன்ற கட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கு கடந்த டிசம்பா் மாதம் 7-ஆம் தேதி அனுமதி வழங்கியது […]
தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.! அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையில் 10 சதவீதத்தை உடனே கட்ட வேண்டும் என்று தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சீர்செய்யப்பட்ட மொத்த வருவாயை செலுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகள் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 92,000 கோடி ரூபாயை தவணை முறையில் செலுத்த அனுமதிக்க கோரி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும் என்ற உத்தரவை […]
பீகார் மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை காரணம்காட்டி பீகார் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு முற்றிலுமாக நீங்கும்வரை பீகாரில் பேரவை தேர்தலை நடத்தக்கூடாது என்ற மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனிடையே, பீகார் சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 29-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்பு அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டி உள்ளது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் […]
கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவிக்கைகக்கு எதிராக கல்லுரி மாணவர்கள் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். கொரோனா அச்சுறுத்தலால் கல்லூரிகளில் பாடங்கள் நடத்தாமல் தேர்வை ரத்துசெய்ய மாணவர்கள் கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடப்படுகிறது. மேலும், இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தாமல் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அரசு பட்டம் வழங்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பாக யு.ஜி.சி.யை மாநிலங்கள் […]
அடித்தட்டு மக்களின் வாழ்வில் வளம் சேர்க்க வழிவகுத்துள்ள உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன் – துணை முதல்வர். கடந்த 2009-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் பட்டியலினத்தவருக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்து அருந்ததியருக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் இன்று தீர்ப்பு […]
நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய 7 மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக வழக்கு தொடர 7 மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர பஞ்சாப், ராஜஸ்தான், சத்திஸ்கர், புதுச்சேரி, மேற்குவங்கம், ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநில அரசுகள் முடிவு செய்துள்ளனர். நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி நீதிமன்றத்தை நாடுவது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி […]
ஓ.பி.சி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே அமல்படுத்தக் கோரி அதிமுக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு. மருத்துவப் படிப்பில் OBC 50% இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுக மேல்முறையீடு செய்துள்ளது. ஓபிசி பிரிவுக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவது பற்றி மத்திய அரசு 3 மாதத்தில் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவுக்கு 50% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கால தாமதம் தேவையில்லாதது என்று அதிமுக மேல்முறையீடு […]
பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சுஷாந்த்சிங் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுஷாந்த் தற்கொலை தொடர்பாக பீகாரின் பாட்னா போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தது செல்லும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், வழக்கு விசாரணையை மும்பைக்கு மாற்றக்கோரி சுஷாந்தின் காதலி ரியா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உடுமலை கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமியின் விடுதலை மற்றும் 5 பேரின் தண்டனை குறைப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு. திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட சங்கர் – கவுசல்யா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2016-ம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார். இந்தக் கொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் கடந்த […]
பி.எம்.கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்காக விருப்பமுள்ளவர்கள் பி.எம். கேர்ஸில் நிதி அளிக்கலாம் என்று தெரிவித்தார். கொரோனா போன்ற திடீரென ஏற்படும் பேரிடர் பிரச்னைகளை சமாளிக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்கவும் உருவாக்கிய இந்நிதியத்திற்கு, தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் நன்கொடை அளித்து உள்ளனர். இந்நிலையில், பி.எம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு […]
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு. வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஆலையை திறக்க அனுமதியில்லை என்றும் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் […]