பழனி துப்பாக்கி சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியம் உயிரிழப்பு. திண்டுக்கல் மாவட்டம், பழனி நரிக்கல்பட்டி சேர்ந்தவர் இளங்கோ. இவருக்கு அப்பர் தெருவில் 12 செண்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, பழனியில் தியேட்டர் நடத்திவரும் நடராஜன் என்பவர், தனக்கு சொந்தமான இடம் என கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, இளங்கோவின் உறவினர்களான பழனிசாமி, சுப்பிரமணி ஆகியோரும் நடராஜனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகராறில் நடராஜன் துப்பாக்கியால் […]