சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேங்ஸ்டர் படமான ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இப்படத்தின் பெரும்பகுதி சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூர் புறப்பட்டார் ரஜினிகாந்த். இன்று காலை ஜெய்ப்பூர் செல்வதற்காக சென்னை விமானம் நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்திடம், தி.மலை நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரஜினி, […]