பல்வேறு கட்ட அரசியல் பரபரப்புக்கு மத்தியில் கடந்த ஜனவரி 30ஆம் தேதி சண்டிகர் மேயர் தேர்தல் நடைபெற்றது. சண்டிகர் மேயர் தேர்தல் அதிகாரியாக பொறுப்பில் இருந்த அணில் மாஷி தேர்தலை நடத்தினார். மொத்தமுள்ள 35 வார்டுகளில், பாஜக 14 இடங்களிலும், ஆம் ஆத்மி 13 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும், அகாலி தளம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்று உறுப்பினர்களை கொண்டு இருந்தன. அமைச்சர்கள் சொத்துகுவிப்பு வழக்கு.. ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! பாஜக சார்பில் மனோஜ் சோன்கரும், […]
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா மற்றும் உத்தரவுகளுக்கு உரிய நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட மறுக்கிறார் என்று தமிழக அரசு பல முறை முறையிட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் நடந்து வருகிறது. அப்போது, ஆளுநர் தரப்பு, வழக்கறிஞருக்கு நீதிபதிகள் சரமாரி […]
3ஆம் பாலினத்தவர்களுக்கும் எந்தவித பாகுபாடு இல்லாமல் வேலை வழங்கபடுவதற்கு நெறிமுறைகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஷானாவி பொன்னுசாமி எனும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் ஏர் ஹோஸ்டர்ஸ் எனப்படும் விமான பணிப்பெண் வேலைக்கு விண்ணப்பித்து வருகிறார். ஆனால், அவர் அந்த வேலை விண்ணப்பத்தை தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளனர். இது குறித்து, சட்ட ரீதியாகவும், உச்சநீதிமன்றத்தில் போராடி வருகிறார் ஷானாவி பொன்னுசாமி. […]