பதநீர் – கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து கிடைக்கும் இயற்கை பானம் ஆகும். பனை மரத்தில் இருந்து வரும் பாலையை முழுவதுமாக வளர விட்டால் அதிலிருந்து கிடைப்பது தான் நுங்கு. அந்த பாலையை வளர விடாமல் நுனியில் சீவி அதில் ஒரு பானையில் சுண்ணாம்பை தடவி கட்டி வைத்து விட்டால் அதிலிருந்து நீர் கசிந்து வரும். பின்பு […]
Watermelon milk shake- தர்பூசணி மில்க் ஷேக் செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். நீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி நம் உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை தீர்த்து வறட்சி ஆகாமல் பார்த்து கொள்ளும் .மேலும் அடிக்கடி தாகம் ஏற்படாமல் பார்த்து கொள்ளும் . தேவையான பொருட்கள்; தர்பூசணி =அரை பழம் பால் =அரை லிட்டர் சர்க்கரை =தேவைக்கேற்ப பாதாம் பிசின் =2 ஸ்பூன் சப்ஜா விதை =1 ஸ்பூன் செய்முறை; முதலில் அரை தர்பூசணி பழத்தை […]
பானக்கம் -பானகத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் செய்முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பானக்கத்தின் நன்மைகள்: பொதுவாக பங்குனி சித்திரை மாதங்களில் தான் நம் ஊர்களில் திருவிழாக்கள், நேத்திக்கடன்கள், பாதயாத்திரை செல்லுதல் போன்ற நிகழ்வுகள் நடத்தப்படும். இந்த காலங்களில் வெயிலின் தாக்கமும் சற்று கொடூரமாக இருக்கும். இதனை சமாளிக்க பானகம் மிகச் சிறந்த பானமாகும்.விரதம் இருப்பவர்களுக்கு நீரிழப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் . இந்த பானகத்தை பானக்கம், பானகரகம், பானகம் என வெவ்வேறு பெயர்களால் ஒவ்வொரு ஊர்களிலும் அழைக்கப்படுகிறது. […]
வெயில் காலங்களில் அனைவரும் விரும்பி உட்கொள்ள கூடிய ஒரு பழமாக தர்பூசணி இருக்கிறது. அனைவரும் விரும்பி உட்கொள்வர். தர்பூசணி பழசாறுடன் இளநீர் கலந்து அருந்த வெயிலால் ஏற்படும் வெப்பம் குறையும். உடல் சூடு தணியும்.தர்பூசணிப் பழத்துண்டுகளை பதநீரில் போட்டு, ஒரு துண்டு பனிகட்டி சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி உடல் குளிர்ச்சி ஏற்படும். வயிற்று வலி தீரும். தர்பூசணியில் பொட்டாசியமும் அதிக அளவில் உள்ளது. இது மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும். இதயத்துடிப்பை சீராக்கும். […]
தமிழரின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் இயற்கையாக கிடைக்கும் கள் முக்கியத்துவம்வாய்ந்ததாக உள்ளது. சித்தர்கள் கள்ளின் மருத்துவப் பயன்களை தெளிவாக பதிவு செய்து சென்றுள்ளனர். ஆண்களுக்கு உடல் வலிமையையும், விந்து சக்தியும் பனை மரத்து கள்ளால் அதிகரிக்கும் என தமிழ் சித்தர் அகத்தியர் குணப்பாடம் கூறுகிறது. பனை மரத்தின் பால் தெளுவு அல்லது தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும். இந்த பாலை100-200 மி.லி. தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். […]