சென்னை : கோடை வெயிலை கருத்தில் கொண்டு சென்னை, மதுரை மாவட்டங்களில் கட்டுமான தொழிலாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வேலை செய்ய வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால், பொதுவெளியில் கட்டுமான தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு வேலைகள் பார்க்கும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அவர்கள் நலனுக்காக அரசு மற்றும் தொழிலாளர் அமைப்புகள் பல்வேறு செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இப்படியான கோடை கால சமயத்தில் தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே […]
Kodaikanal : இதுவரையில் கொடைக்கானல் செல்ல சுமார் 54 ஆயிரம் வாகனங்கள் இ-பாஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோடை காலம் தொடங்கியது என்றாலே தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்ச்சியான இடங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிவிடும். கட்டுக்கடங்காத வகையில் வாகன நெரிசல் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாவதை தடுக்க அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுநல வழக்கில் ஓர் புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, ஊட்டி கொடைக்கானல் வருவோர் , கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்டது போல, […]
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து வருவதால் , தற்போது ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலாவாசிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. மாணவர்களுக்கு கோடை விருமுறையும் ஆரம்பித்து விட்டதால் மேற்கண்ட சுற்றுலா தளங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் கடும் முயற்சி செய்து வருகின்றனர். ஊட்டியில் மட்டும் தினசரி சராசரியாக 20 ஆயிரம் வாகனங்கள் […]
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைக்கிறது. வெப்பநிலை அதிகரித்துள்ள காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகள், வயதானோர் குறிப்பிட்ட வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், முடிந்த வரையில் நண்பகல் வெயிலில் வேலை செய்வதை தவிர்க்கவும் அரசு அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) […]
Summer 2024 : கோடை காலம் ஆரம்பித்துவிட்டது. வெயில் சுட்டெரித்து வருகிறது. வீட்டினுள் இருந்தால் கூட வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியாத நிலை உள்ளது. மேலும், இன்னும் ஏப்ரல், மே மாத காலங்கள் இருக்கிறதே என்ற கவலை மக்கள் மத்தியில் தற்போதே எழ ஆரம்பித்து விட்டது. Read More – இன்று வெளியாகிறது மக்களவை, 4 சட்டமன்றங்கள் மற்றும் இடைத்தேர்தல் தேதிகள்.. பனிப்பாறை உருகுவது, உலக தட்பவெப்பநிலை மாற்றம், உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கூறி உலக […]
Summer 2024 : நமது நாட்டில் கோடை காலம், தென்மேற்கு பருவமழை காலம், வடமேற்கு பருவமழை காலம், குளிர் காலம் என நான்கு வகை காலங்கள் பரவலாக நிலவி வருகின்றன. கோடைகாலமானது மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்கி ஜூன் மாதம் வரையில் நீடிக்கும். அந்த வகையில் நேற்று முதல் கோடை காலம் தமிழகத்தில் ஆரம்பித்துவிட்டது. இதனால் வெயிலின் தாக்கம் அனல் காற்றின் அளவு பற்றிய செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. Read More – PKLSeason10 […]