ஆட்சியர் அலுவலகம் முன்பு கரும்பு விவசாயிகள் போராட்டம்.! ,முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு.!
தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கரும்பு விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் தனியார் கரும்பு ஆலை, விவசாயிகளின் பெயரில் சுமார் 300 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும் , அதனை அடைத்து விவசாயிகளின் பெயரில் உள்ள கடனை அடைக்க வேண்டும் எனவும், இதில் தமிழக அரசு தலையிட்டு ஆலையை அரசே எடுத்து நடத்த வேண்டும் எனவும் கரும்பு விவசாயிகள் கடந்த 21 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். […]