தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கரும்பு விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் தனியார் கரும்பு ஆலை, விவசாயிகளின் பெயரில் சுமார் 300 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும் , அதனை அடைத்து விவசாயிகளின் பெயரில் உள்ள கடனை அடைக்க வேண்டும் எனவும், இதில் தமிழக அரசு தலையிட்டு ஆலையை அரசே எடுத்து நடத்த வேண்டும் எனவும் கரும்பு விவசாயிகள் கடந்த 21 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். […]