எகிப்தின் சூயஸ் கால்வாயில் கோரல் கிரிஸ்டல் என்ற கப்பல் சிக்கியது. கடந்த வியாழக்கிழமை உலகின் பரபரப்பான நீர்வழிப் பாதையான சூயஸ் கால்வாயில் கோரல் கிரிஸ்டல்( coral crystal ) என்ற கப்பல் சூயஸ் கால்வாயின் இரட்டைப் பாதையில் சிக்கியது. அதன் பிறகு மற்ற கப்பல்கள் மற்ற பாதையில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கோரல் கிரிஸ்டல் சிக்கியதால் அந்த பாதை தற்போதைக்கு மூடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தற்போது சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள சரக்கு கப்பலை மீட்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. […]
எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் சர்வதேச அளவில் உலகின் மிக முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடமாக விளங்குகிறது.இந்த கால்வாயில் கடந்த மார்ச் மாதம் ‘எவர்கிவன்’ என்ற மிகப்பெரிய சரக்கு கப்பல் ஒன்று பிற கப்பல்கள் செல்ல முடியாதபடி கால்வாயின் குறுக்காக தரை தட்டி நின்றது. இதனால்,சர்வதேச சரக்கு கப்பல் போக்குவரத்தில் தடை ஏற்பட்டு, உலக வர்த்தகம் பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு வார கால கடுமையான முயற்சிக்கு பின்னர் ‘எவர்கிவன்’ கப்பல் மீண்டும் மிதக்கும் நிலைக்கு கொண்டு வரப்பட்டது. […]