பிரிட்டனில் மிகப்பெரிய குடும்பம் என்ற பெருமையை பெற்றுள்ள தம்பதி தான் சூ மற்றும் நோயல் ராட்போர்ட்.இந்த தம்பதிகளுக்கு 21 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சமூக வலைதளபக்கத்தில் சூ ஒரு பதிவை ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில் தங்களுக்கு பிறக்கவிருக்கும் 22 பிள்ளை வரவேற்க குடும்பமே ஆவலாக காத்து இருப்பதாக அவர்கள் தெரிவித்தார். இந்த செய்தியை அவர் மருத்துவமனைக்கு செல்லும் முன் பதிவிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் லங்காஷயர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். […]