சீனா ஆப்டிகல் ரிமோட் சென்சிங் என்ற புதிய செயற்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. சீனாவின் ஜிச்சாங் ஏவுதளத்தில் இருந்து காஃபென் 13 செயற்கைக்கோளுடன் மார்ச்-3பி ராக்கெட் இன்று அதிகாலை விண்ணில் ஏவப்பட்டது. விண்ணை நோக்கி பாய்ந்த புதிய செயற்கைக்கோள் வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப்பாதைக்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது. சீனா ஏவியுள்ள இந்த காஃபென் செயற்கோள் ஆனது நில ஆய்வு,சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வானிலை முன்னறிவிப்பு போன்ற பணிகளை செய்ய உள்ளது என்று ஜிச்சாங் ஏவுதள துணை இயக்குநர் வு வீகி […]
இன்று அதிகாலை நாசாவின் கல்பனா சாவ்லா விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய வம்சாவளியை சேர்ந்தரான விண்வெளி வீராங்கணை கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்ட சிக்னஸ் கார்கோ(Cygnus Cargo) என்ற விணகலமானது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 8 ஆயிரம் பவுண்ட் எடை பொருட்களை கொண்டு செல்லும் வகையில் விர்ஜினியாவில் இருந்து ஏவப்பட்டது. இந்த விண்கலம் 2 நாள் பயணத்திற்கு பின் திங்கட்கிழமை சர்வதேச வின்வெளி நிலையத்தை சென்றடையும்.இதற்கு முன் கடந்த வியாழன் […]