சுஷாந்த் மரண வழக்கில் மும்பை காவல்துறை உடந்தையாக இருப்பதாக பாஜக தலைவர் மற்றும் எம்.பி. சுப்ரமணிய சுவாமி குற்றம் சாட்டியுள்ளார். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம் 14 -ம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் உயிரிழந்த வழக்கை தற்பொழுது சிபிஐ நடத்தி வருகிறது. இந்த வழக்கில் மும்பை காவல்துறை உடந்தையாக இருப்பதாக, துபாயை தளமாகக் கொண்ட தொழில்முறை கொலையாளிகளுக்கும் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாஜக எம்.பி சுப்ரமணியசுவாமி சுவாமி தரிசனம் செய்தார். நடிகர் ரஜினி பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவேன் என வெறும் டிரைலரை மட்டுமே காண்பித்து வருகிறார் என விமர்சனம் செய்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அரசியலுக்கு வரவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதன் பின்னர் மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவர் அதிகாரபூர்வ அரசியல் கட்சியை தொடங்கவில்லை. இருப்பினும் அவர் கட்சி தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் […]
சேதுசமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது என்றும், மாற்று பாதையில் இத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தையும் ஸ்ரீலங்கா இணைக்கும் ஒரு மணல் திட்டான ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க கோரி, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அப்போது மத்திய அரசாக இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இதற்கு எதிர்ப்பு […]
மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள சென்னை ஐ.ஐ.டியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டிய அவசியம் இல்லை.அதற்காக எந்தவொரு பிரச்சனையும் இல்லை என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ”மத்திய அரசு கட்டுப்பாட்டில்,அதன் நிதியின் மூலம் உருவாகியுள்ள சென்னை ஐ.ஐ.டியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உருவாக்கப்பட்டது தான் ஐ.ஐ.டி.க்கள் ஆகும். மத்திய அரசின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் […]