சு.வெங்கடேசன்: பொதுவாகவே அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக இருக்க கூடாது என்பது அரசு விதி. மத்திய சிவில் சேவைகள் (நடத்தை) விதி 1964இன் படி இது அமலில் இருக்கிறது. இந்த விதியின் கீழ் RSS எனும் இந்துவதுவா இயக்கத்திலும் மத்திய அரசு ஊழியர்கள் உறுப்பினர்களாக இருக்க கூடாது என்பது அரசு விதி. ஆனால் அது தற்போது தளர்த்தப்பட்டு இருப்பதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். அவர் தனது எக்ஸ் சமூக வலைதள […]
Madurai AIIMS : 5 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளது மத்திய அரசு. கடந்த 2018ம் ஆண்டு மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 221 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடி மதிப்பில் 750 படுக்கைகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதன்பின், கடந்த 2019ம் ஆண்டு ஜனவரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி வைத்தார். Read More – […]
Su Venkatesan : இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் ஜூலை மாதம் 12ம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஆனந்த் அம்பானி – ராதிகாவின் ப்ரீ வெட்டிங் விழா கோலாகலமாக குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தியா மட்டுமின்றி உலக முழுவதும் இருந்து பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த […]
மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை, எம்பி சு.வெங்கடேசனை போனில் அழைத்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மதுரை, வண்டியூரில் தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் வெகு விமர்சையாக தெப்பக்குள விழா நடைபெறும். தை மாத பௌர்ணமி நாளன்று தெப்பக்குள மாரியம்மன் திருவிழா நடைபெறும். அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்பட்டு , தெப்பக்குளத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு […]
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. எய்ம்ஸ் மருத்துவமனை வருவதால் உயர்தர சிகிச்சை விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழக பொதுமக்கள் இருந்தனர். ஆனால், இடம் தேர்வு செய்வது முதல் நிதி ஒதுக்குவது வரை, பல ஆண்டுகளாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கிடப்பில் போடப்பட்டது. இருப்பினும், கடந்த 2018 ஜூனில் மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் […]
நேற்று முன்தினம் பாராளுமன்றத்திற்குள் இரு நபர்கள் மக்களவையில் பாதுக்காப்பு அரண் மீறி உள்ளே நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், நேற்றும் மக்களவையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விளக்கம் கோரிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் – எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்..! இரு அவைகளும் […]
தமிழ்நாட்டில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக 48 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருமழை பெய்துள்ளது. இதனால் சென்னை மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ள நிலையில், அவர்களது இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியாகியாகியுள்ளது. இந்த நிலையில், மழை பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் நலன் கருதி, அண்ணா, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பல்கலைக்கழக தேர்வுகளும் […]
டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிக்கும் மாணவர்கள் இந்தி மொழியை ஒரு பாடமாக கட்டாயமாக தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு எம்.பி சு.வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டெல்லி பல்கலை கழகத்தில் இளங்கலை படிக்கும் மாணவர்கள் இந்தி மொழியை ஒரு பாடமாக ஏற்று கற்க வேண்டும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது குறித்து, இன்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், 130 கோடி மக்களும் தமிழை காப்பாற்ற வேண்டியது கடமை என […]
நீட் என்றாலே குழப்பம்,பாதிப்பு,மாணவர்களுக்கான அநீதி என்றுதான் அர்த்தமா? என்றும்,நீட் முதுகலை மருத்துவ தேர்வுகளை ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். 2021 நீட் முதுகலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு முடிவதற்கு முன்பே 2022 நீட் முதுகலை மருத்துவப் படிப்பிற்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே,நீட் என்றாலே குழப்பம்,பாதிப்பு,மாணவர்களுக்கான அநீதி என்றுதான் அர்த்தமா? என்று கேள்வி எழுப்பிய மதுரை எம்பி சு.வெங்கடேசன் அவர்கள்,நீட் […]
கடந்த ஆண்டு அஞ்சலகத்தில் பெற்ற வெற்றியை இந்த ஆண்டு வங்கிகளில் உறுதி செய்வோம் என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் அறிக்கை. தமிழகத்தில் வங்கிக் கிளைகள் அனைத்திலும், அனைத்து படிவங்களும் தமிழ் மொழியில் வழங்கப்படும் என பாரத் ஸ்டேட் வங்கியின் பொதுமேலாளர் உறுதி அளித்துள்ளார். இதுவே சிறந்த பொங்கல் பரிசு என்றும் கடந்த ஆண்டு அஞ்சலகத்தில் பெற்ற வெற்றியை இந்த ஆண்டு வங்கிகளில் உறுதி செய்வோம் எனவும் சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள […]
ஹிந்தி அல்லாத மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி என்று மதுரை சு.வெங்கடேசன் எம்.பி பதிவு. ஹிந்தி அல்லாத மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி என்று மதுரை சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், Institute of Cost Accountants of India தலைவர் பி.ராஜு ஐயர் அவர்களிடம் இருந்து ஜனவரி 3, 2022 தேதியிட்ட பதில் வந்துள்ளது. ICAI (inter) தேர்வு அறிவிக்கையின் 13வது அம்சம் ‘இந்தி வழி தேர்வர்களுக்கு மட்டும் எழுத்து பூர்வமான […]
மதுரை:சிறப்பு ரயில்களை ரெகுலர் ரயில்களாக ஆக்கும் பணி தொடங்கியதாகவும், ஏழு நாட்களில் பணி முடியும் என்றும் எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இனி முதியோர் கட்டணச் சலுகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.இது நீண்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “கொரோனா காலத்தில் சிறப்பு ரயில்களாக அறிவிக்கப்பட்டவற்றை சாதாரண இரயில்களாக மாற்ற வேண்டும் என்றும், முதியோர் கட்டணச் சலுகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் மீண்டும் வழங்க வேண்டும் […]
மதுரை:வைகை அணையிலிருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்படுவதால் அதனை ஒட்டியுள்ள கரையோர மக்கள் கவனமாய் இருக்கவும் என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் எச்சரித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதனால்,தமிழகத்தில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. அந்த வகையில்,வைகை அணை நிரம்பும் நிலையில் இருப்பதால் அணையிலிருந்து 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.இதனால், தேனி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களுக்கு […]
நவராத்திரிக்கு ஒன்பது நிற உடையில் வரவேண்டுமென யூனியன் பாங்க் ஆப் இந்தியா பொது மேலாளர் சுற்றறிக்கைக்கு சு.வெங்கடேசன் கண்டனம். யூனியன் பாங்க் ஆப் இந்தியா பொது மேலாளர் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒன்பது நிற உடைகளில் வர வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பி இருப்பதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நவராத்திரிக்கு ஒன்பது நிற உடையில் வா! உள்ளாவிட்டால் தண்டம் கட்டு. இது என்ன அரசு வங்கியா? இல்லை அதிகாரி வீட்டின் பூஜை […]
அஞ்சல்துறை பணம் செலுத்துவதற்கும் பெறுவதற்குமான படிவங்கள், பணவிடைப் படிவங்கள் ஆகியவையில் தமிழ் அகற்றப்பட்டுள்ளது என சு.வெங்கடேசன் எம்பி கண்டனம். இதுகுறித்து மதுரை சு.வெங்கடேசன் எம்பி., அஞ்சல் பொது மேலாளருக்கு எழுதிய கடிதத்தில், அஞ்சல் துறையில் பண விடை தமிழில் அச்சடிக்கப்பட்டு வந்தது. ஆனால் மின்னணு படிவங்கள் வந்தவுடன் பண விடையில் தமிழுக்கு விடை கொடுக்கப்பட்டு விட்டது. சேமிப்புகளுக்கான பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல் ஆகிய படிவங்களும் தமிழில் இருந்தன. தற்போது இல்லை. அலைபேசிகளில் தமிழ் எழுத்துக்களை பதிவிறக்கம் […]
மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தின் விபரம் கீழே தெரவிக்கப்பட்டுள்ளது. தபால் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் தமிழ் பாடம் இணைக்கப்பட வேண்டும் என்று கூறி மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: “தபால் துறையின் வேலைகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை தொடர்பான ஒரு முக்கியமான பிரச்சினையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.அதாவது,தபால் துறையில் மக்கள் தொடர்பு நிலையில் உள்ள அலுவலர்கள் நியமனங்களுக்கு […]
நுழைவுத் தேர்வுகளை இரத்துச் செய்யாமல், +2 தேர்வு மட்டும் இரத்து என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு மாணவர்களுக்கு எந்த நன்மையும் விளைவிக்கப்போவதில்லை என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை 12 ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக மத்திய கல்வி உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக்கு பின்னர், கொரோனா பரவல் காரணமாக CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில், எம்.பி சு.வெங்கடேசன் தனது […]