கடந்த 9 ஆண்டுகளில் வராக் கடன் ரூ 10.42 லட்சம் கோடி. இதே காலத்தில் வசூலிக்கப்பட்ட வராக்கடன் ரூ 1.61 லட்சம் கோடி மட்டுமே. மீதம் 8.79 லட்சம் கோடி என்ன ஆனது? என மத்திய நிதியமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடாளுமன்றத்தில் வங்கிக் கடன்கள் பற்றி நான் எழுப்பி இருந்த கேள்விக்கு ஒன்றிய நிதி இணையமைச்சர் பகவத் காரத் பதில் அளித்துள்ளார். 2014-15 இல் இருந்து […]
அஞ்சல் துறையில் வரலாற்றில் முதல்முறையாக தமிழில் பாராட்டு சான்றிதழ் வழங்கியதற்கு வரவேற்பு தெரிவித்து, வெங்கடேசன் எம்.பி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிற பாராட்டுச் சான்றிதழ் இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தற்போது முதல் முறையாக தமிழில் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழில் பாராட்டு சான்றிதழ் வழங்கியதற்கு வரவேற்பு தெரிவித்து, வெங்கடேசன் எம்.பி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘அஞ்சல் அலுவலக பண விடைகள் (Money order) சிறு […]
டெல்லி பல்கலை தந்துள்ள விளக்கம் அறிவுத்துறையின் வீழ்ச்சியை காட்டுகிறது என எம்.பி சு.வெங்கடேசன் அறிக்கை. டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கில பாடத்திட்டத்திலிருந்து தமிழ் பட்டியலின எழுத்தாளர்கள் பாமா மற்றும் சுகிர்தராணியின் படைப்புகள் பல்கலைக்கழக மேற்பார்வைக் குழுவின் ஆலோசனையின் பேரில் நீக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து நீக்கப்பட்ட படைப்புகளுக்கு பதிலாக சுல்தானாவின் கனவுகள் மற்றும் ராமாபாய்-ன் படைப்புகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தில், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்தது. அதன்படி, படைப்பாளிகளின் சாதி, மதம் மொழி பின்புலத்தை வைத்து […]
மதுரையில் நூலகம் அமைப்போம் என்று அறிவித்து அதனை நிறைவேற்றாமல் துரோகம் செய்த அதிமுக. மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அவர்கள், மூன்றாண்டுக்கு முன் 6 கோடியில் மதுரையில் நூலகம் அமைப்போம் என்று அறிவித்து அதனை நிறைவேற்றாமல் அதிமுக துரோகம் செய்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் கரனல் ஜான் பென்னிகுயிக் வாழ்ந்த இடம் . எனவே அந்த கட்டிடத்தை இடிக்கவோ, மாற்றவோ கூடாது என்று […]
மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து, மதுரை மாநிலங்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில், தமிழகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. அதன்படி சென்னையில் இரண்டு […]
காலம், எந்த அதிகாரத்தின் கையில் நீங்கள் கூலிகளாக இருக்கிறீர்களோ? அந்த கைகளால் கூட தூக்கி நிறுத்த முடியாத கறாரான தராசு. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் கடந்த குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் பெரும் சர்ச்சை வெடித்தது. […]