பள்ளி கல்லூரிகளை பொங்கல் பண்டிகை கழித்து திறக்க முடிவு செய்வதே மாணவர்கள் பெற்றோர்கள் நலன் காக்கும் நடவடிக்கையாக இருக்கும் என்று சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் வரும் 16-ஆம் தேதி முதல் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்தது. […]
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அனுமதியின்றி பேரணி நடத்திய விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுகரசர் உள்ளிட்ட 7 கட்சி தலைவர்கள் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளான காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை அண்ணா […]
தேர்தலில் பணப்பட்டுவாடா என்பது நிச்சயமாக ஜனநாயக சீரழிவுதான் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வருகின்ற 21-ஆம் தேதி நடைபெறுகிறது.இந்த நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் மூலம் தமிழகத்தின் நலன் காக்கப்பட வேண்டும். தேர்தலில் பணப்பட்டுவாடா என்பது நிச்சயமாக ஜனநாயக சீரழிவுதான்.நாடு முழுவதும் இந்த நிலை தொடர்கிறது . தேர்தலில் நாட்கள் குறைக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
வேட்டி கட்டியதால் பிரதமர் மோடி தமிழன் ஆகிவிடமாட்டார் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.எடப்பாடி அரசு பிஜேபி அரசு போல் செயல்படுகிறது.இந்திய பிரதமரும் சீன பிரதமரும் இங்கு வந்தது மகிழ்ச்சியானது தான். இதனால் மக்களுக்கு என்ன நடந்தது என்பது முக்கியம் .வேட்டி சட்டை அணிவதால் மோடி தமிழராக முடியாது. குப்பைகளை எடுப்பதினால் சாதனை கிடையாது. இது மலிவான விளம்பரம் […]
அதிக பேனர்கள் வைப்பதால் கட்சியின் பலத்தை காட்ட முடியாது என்று காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பேனரில் தலைவர்கள் உயிர்வாழ முடியாது. அதிக பேனர்கள் வைப்பதால் கட்சியின் பலத்தை காட்ட முடியாது.பேனர்கள் வைப்பதற்கு தமிழக அரசு சட்டம் இயற்றி, முற்றிலுமாக தடை விதிக்க வேண்டும். ஒரு மொழியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டுமெனில் அந்த தகுதி தமிழுக்கு மட்டுமே உள்ளது. தேர்வுகள் என்பது மாணவர்களை மேம்படுத்த மட்டுமே இருக்க வேண்டும். […]
ரஜினிகாந்த் எந்த கட்சியிலும் சேர மாட்டார் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ரஜினிகாந்த் பாஜக மட்டுமல்லாமல், அவர் எந்த கட்சியிலும் சேர மாட்டார்.எந்த ஒரு தலைவருக்கும் கீழ் பணிந்து வேலை பார்க்கக்கூடிய நபர் அல்ல ரஜினிகாந்த் என்று தெரிவித்தார். மேலும் மோடி வெளிநாட்டில் இருக்கும் பழக்க தோஷத்தால்தான் நம் தமிழக அமைச்சர்களும் வெளிநாடு செல்கின்றனர்.பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் 100 நாள் ஆட்சி கடந்த […]
பாஜக மாநில தலைவர் பதவியெல்லாம் ரஜினிகாந்த் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது ப.சிதம்பரம் குறித்த அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சு குறித்து கேள்விக்கு திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில்,திமுக அமைச்சர்களின் விமர்சனம் மத்திய பாஜக அரசை சந்தோஷப்படுத்ததான் .மேலும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. பாஜக மாநில தலைவர் பதவியெல்லாம் ரஜினிகாந்த் ஏற்றுக்கொள்ளமாட்டார்.பாஜக தேசிய தலைவர் பதவி கொடுத்தால் […]
சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் பழனிச்சாமியின் இந்த பயணம் தமிழகத்திற்கு நலன் சேர்க்கும் வகையில் இருந்தால் நன்றாக இருக்கும். இதுவரை ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சியில் போடப்பட்ட முதலீட்டாளர்கள் ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே இந்த முறை அதுபோன்று இருக்க கூடாது, பொருளாதார நெருக்கடியை போக்க ரிசர்வ் வங்கியில் உள்ள பணத்தை மத்திய அரசு பயன்படுத்த நினைப்பது, குண்டு காயத்தின் மேல் பேண்டேச் ஓட்டுவது […]
நடிகர் கருணாஸ் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அவர்களை அவருடைய கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துள்ளார். நடிகர் கருணாஸ் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அவர்களை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது :சபாநாயகர் ஒரு தராசு மாதிரி நடுநிலையாக நடக்கவேண்டியவர் ஒருதலை பட்சமாக நடக்கின்றார்.நான் என்னுடைய தனிநபர் தீர்மானத்தை கொடுத்துள்ளேன்.சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய சொல்லி கொடுத்துள்ளேன் அது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.என்னை பொறுத்த வரை ஊடகங்களும் சரி , பொது மக்களும் சரி பரவலாக என்னை திமுக தலைவர் முக.ஸ்டாலின் , […]
நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை ஆய்வு செய்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். ஏனெனில் தமிழகத்தில் நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவது குறைந்துவிட்டது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
முன்னாள்பிரதமர்நரசிம்மராவ் மற்றும் எளிமையின் சின்னம்கக்கன் அவர்களையும் அவர்தம் நினைவுநாளை இளங்கோவன் பிறந்தநாள்கொண்டாட்டத்தில்மறந்த காங்கிரஸ் என தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். முன்னாள்பிரதமர்நரசிம்மராவ் மற்றும் எளிமையின் சின்னம்கக்கன் அவர்களையும் அவர்தம் நினைவுநாளை இளங்கோவன் பிறந்தநாள்கொண்டாட்டத்தில்மறந்த காங்கிரஸ் — Dr Tamilisai Soundararajan (மோடியின் குடும்பம் ) (@DrTamilisai4BJP) December 24, 2017 இதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி அதிகார்பபூர்வ ட்விட்டர் பக்கத்தில் “நேற்று காலை @INCTamilNadu தலைமையகமான […]