திருச்சி : தேசிய தொழில் நுட்பக் கழக விடுதியில் பணியாற்றி வந்த பெண் காப்பாளர் பேபி ராஜினமா செய்துள்ளார். திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியில் அமைந்துள்ள தேசிய தொழில் நுட்பக் கழக (என்ஐடி) விடுதியில், மாணவி ஒருவர் கடந்த ஆக 29-ஆம் தேதி, பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளார். விடுதியில், இன்டர்நெட் கனெக்டின் பழுது ஏற்பட்டிருந்த காரணத்தால் அந்த விடுதி நிர்வாகம், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் பணியாளரைச் சரி செய்து கொடுப்பதற்காக அழைத்துள்ளனர். அப்போது வேலை செய்துகொண்டிருந்த […]
திருச்சி : விடுதியில் மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்து உள்ளது என்.ஐ.டி நிறுவனம். திருச்சியில் உள்ள என்ஐடி விடுதியில் நேற்று (வியாழக்கிழமை) காலை ஒப்பந்த ஊழியர்கள் 5 பேர் இணையதள சேவை அளிப்பதற்காகச் சென்றுள்ளனர். அப்போது ஒரு அறையில் மாணவி தனியாக இருக்கும் போது அங்கு வந்த ஊழியர்களில் ஒருவரான கதிரேசன் என்பவர் அந்த மாணவியிடம் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அந்த சமயத்தில் சாதுரியமாகச் சுதாரித்துக் கொண்ட அந்த […]
திருச்சி : என்.ஐ.டி விடுதியில் மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் துவாக்குடியில் அமைந்திருக்கும் தேசிய தொழில் நுட்பக் கழக (என்ஐடி) விடுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென நேற்று இரவு முழுவதும் விடிய விடிய மாணவ, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். என்ஐடி மாணவிகள் விடுதி […]
ஆன்லைன் தேர்வுகள் நடத்தக்கோரி போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீதான 12 வழக்குகள் வாபஸ். ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவின் பேரிலும், மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஆன்லைன் தேர்வுகள் நடத்தக்கோரி போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீதான 12 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
மங்களூரில் கடந்த 19-ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் இறந்தனர். இன்று திருவனந்தபுரம் வந்த கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கருப்புக் கொடி காட்டி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த குடியுரிமை சட்ட திருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வடமாநிலங்களைபோல தென் மாநிலங்களிலும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை வள்ளுவர் கோட்டம், சென்ட்ரல் ரயில் நிலையம், மதுரை, தேனி, விழுப்புரம், வேலூர், திருச்சி, புதுச்சேரி என பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. மத்திய அரசானது அண்மையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. இந்த திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நாடுமுழுவதும் நடைபெற்று வருகிறது. டெல்லி கல்லூரி மாணவர்களிடையே வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் டெல்லி கல்லூரி மாணவர்கள் மீது […]