ஆந்திர மாநிலத்தில் வாழைப்பழம் விற்ற ஆசிரியருக்கு 150-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் ரூ. 86,300 கொடுத்து உதவினார். ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள நாராயணா பள்ளியில் தெலுங்கு ஆசிரியராக வெங்கட சுப்பையா வேலை செய்து வந்தார். கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டது. இதனால், வெங்கடசுப்பையா ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் வெங்கட சுப்பையா மற்றும் அவருடன் வேலை செய்து வந்த 5 பேரையும் காணொலி மூலம் அழைத்த பள்ளி […]