தமிழ்நாட்டில் போக்குவரத்துக்கு தொழிற்சங்கத்தினர் அறிவித்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் பி.ஆர். ராமன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று காலை தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்றது. அப்போது தலைமை நீதிபதி அமர்வு கூறியதாவது, வேலைநிறுத்ததால் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள் தான். போராட்டம் நடத்த உரிமை உள்ளது, ஆனால், பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது. அரசும், போக்குவரத்துக்கு தொழிற்சங்கமும் ஏன் இந்த […]
தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். காலிப்பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதியத் திட்டம், 15-வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள், அரசுடன் பேச்சுவார்த்தையை கடந்த டிசம்பர் 27 ஆம் தேதியும், ஜனவரி 3 ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் போக்குவரத்து […]