தூத்துக்குடியில் உள்ள நீர்வரத்து ஓடையில் கிராம மக்களே நிதி திரட்டி தூர்வாரும் பணிகளை தொடங்கியுள்ளனர். தூத்துக்குடியில் கோவில்பட்டிக்கு அருகே உள்ள அய்யனேரி கிராமத்துக்கு உட்பட்ட செவல்குளம் கண்மாயில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் வராமல் உள்ளது.சுமார் 130 ஏக்கர் பரப்புடைய இந்த கண்மாய் ஓடை தூர் வாராமல் உள்ள காரணத்தால் நீர்வரத்து நின்றதாகவும், எனவே பெரிய ஓடைகளை தூர் வாரி , கரைகளை பலப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது தூத்துக்குடியில் அய்யனேரி, பிள்ளையார்நத்தம், வெங்கடாசலபுரம் […]