இராணுவ ரகசியங்களை ஸ்ட்ரவா (Strava) என்னும் மொபைல் செயலி வெளியிட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ட்ரவா (Strava) எனும் மொபைல்போன் செயலி பயனாளரின் செயல்பாட்டையும், அவர் பயன்படுத்தும் வழித்தடத்தையும் பதிவு செய்து கொள்ளும். மேப் வடிவிலான பயனாளர் தரவுகளை ஸ்ட்ரவா (Strava) இணையத்தில் வெளியிட்டுள்ளது. இதனை ஆய்வு செய்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள் சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள் வழக்கமாக ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளும் இடங்களும் இந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதே போன்று பல்வேறு நாடுகளிலும் ராணுவத்தினர் மற்றும் உளவு அமைப்பினர் […]