வங்கக் கடல் மற்றும் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, அடுத்த 24 மணிநேரங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. இதனால், மீனவர்கள் அடுத்த 3 நாள்களுக்கு தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. […]
நாகை, கடலூர் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதை அடுத்து நாகை, கடலூர், காரைக்கால், புதுச்சேரி துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.