ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கையாக, நாகை, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் இன்று மாலை ஆம்பன் புயல் உருவாக உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாகை, காரைக்கால், தூத்துக்குடி ஆகிய மாவட்ட துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவுள்ளதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.