சென்னையில் மால்கள் , சினிமா தியேட்டர்கள் மட்டுமே மூட உத்தரவிடப்பட்டுள்ளது.ஆனால் காய்கறி கடைகள் , இறைச்சி , மளிகை கடைகள் போன்றவை வழக்கம் போல செயல்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் கூறினார். சென்னையில் அனைத்து கடைகள் மூடப்படுவதாக வதந்திகளை நம்பவேண்டாம். மேலும் வதந்திகளை பரப்புவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.