இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக கேரள முதலமைச்சர் குற்றசாட்டு. ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை ஏற்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கு எதிரான வகையில் அமித் ஷாவின் கருத்து உள்ளது என குற்றசாட்டியுள்ளார். புதிய கல்வி கொள்கை மூலம் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மத்திய […]
பேரறிஞர் அண்ணா அவர்கள் வழியில் இருமொழிக் கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது என ஓபிஎஸ் அறிக்கை. இந்தி மொழி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றாய் வெளியிட்டுள்ளார். அதில், இந்தி மொழி தேவையெனும் பட்சத்தில் மனமுவந்து கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் தாராளமாக கற்றுக் கொள்ளலாம் என்றும் அதே சமயத்தில் இந்தி திணிப்பு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறி இருக்கிறார்கள். […]