கடும் சரிவுடன் பங்குசந்தைகள் நிறைவு.!
கொரோனா வைரஸ் காரணமாக இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 31,820 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. மேலும் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 700 புள்ளிகள் சரிந்து 9,250 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. இந்நிலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 2,713 புள்ளிகள் குறைந்து 31,390-ல் வணிகம் நிறைவு பெற்றது.அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 756 புள்ளிகள் குறைந்து 9,199-ல் வர்த்தகம் நிறைவு பெற்றது.