ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு, போலீஸ் தடியடியில் தூத்துக்குடியில் 13 பேர் பலியாகினர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், நேற்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தமிழக சட்டம்–ஒழுங்கு குறித்து விசாரித்ததாகவும், அதற்கு கவர்னர், தனது டெல்லி பயணத்தின்போது நேரில் சந்திப்பதாகவும் கூறியதாக தெரிகிறது. இந்த தகவலை உள்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
சில நாட்களுக்கு முன் ரஜினி தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அப்போது ஒரு நபர் நீங்கள் யார் என்று ரஜினியை பார்த்து கேட்டது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நேரத்தில் அந்த நபர் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர், நான் ரஜினியை பார்த்து ஏன் அப்படி கேட்டேன் என்றால், அவர் ஒரு பெரிய மனிதர், 100 நாட்களாக நாங்கள் போராட்டம் செய்த போது எங்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற […]
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டுமென கடந்த மே 22-ஆம் தேதி தூத்துக்குடியில் பேரணியாகச் சென்ற மக்கள் மீது தமிழக காவல்துறை தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர் . 100-க்கும் அதிகமானோர் காயமடைந்து அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்திக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மே 3-ஆம் தேதி தூத்துக்குடி வருகிறார்.
தூத்துக்குடியில் கடந்த மே 22 ம் தேதி காவல்துறை நடத்திய துப்பாக்கி சூடு , தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் .உயிர் இழந்தவரின் குடும்பத்தினரையும் காவல்துறை தாக்குதலில் காயமடைந்தவர்களையும் புதனன்று தூத்துக்குடிக்கு வருகை தந்த நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து ஆறுதல் கூறினார் . தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அவருடன் 10 க்கும் அதிகமானோர் வந்திருந்தனர் , அனைவரும் முந்தியடித்து கொண்டு லிப்டில் ஏறினார் அவர்களிடம் லிப்ட் ஆபிரேட்டர் சாமுவேல் ஜான்சன் (22) […]
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலர் வைகோ எட்டயபுரத்தில் பிரசாரம் செய்தார். எட்டயபுரம், புதூர், நாகலாபுரம், விளாத்திகுளம், சூரன்குடி, வைப்பார், குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வைகோ பிரசாரம் மேற்கொண்டார். எட்டயபுரத்தில் அவர் பேசியதாவது: ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்து, கொண்டுவந்தது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தான். தற்போது ஆலை விரிவாக்கத்துக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்கவில்லை என தமிழக அரசு கூறுவது ஓர் ஏமாற்று வேலை. தமிழக அரசு மோடி சொல்வதை கேட்டு […]