ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலயை மூடிட வலியுறுத்தி கடந்த மே 22-ம் தேதி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.அப்போது போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் காவல்துறை தடியடியும் துப்பாக்கிச்சூடும் நடத்தியது. இதில், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்தத் துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகத் தூத்துக்குடியில் உள்ள சிப்காட் காவல்நிலையம், தென்பாகம், வடபாகம், […]
தமிழகத்தில் தற்போது நடந்துள்ள துப்பாக்கி சூடு சம்பவம் குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த போது நடைபெற்ற திட்டமிட்ட சம்பவங்கள் போல் இருக்கிறது என ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ்பட் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் மோடிக்கு நெருக்கமான வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலை ஆரம்ப முதலே சட்டவிதிகளுக்கு மாறாக மக்களின் உயிருக்கு உலை வைக்கும் வகையில் இயங்கி வருகிறது. இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் போராட்டத்தின் நூறாவது நாளான […]
தூத்துக்குடி காவல்துறையின் அராஜகம்… தூத்துக்குடி மாவட்ட காவல்நிலையங்களில் சட்டவிரோதமாக சிறார்களும் இளைஞர்களும் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் இந்தப் பிரச்சனை குறித்து அவர்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மாவட்ட தலைமை நீதிபதியிடம் முறையிட்டிருக்கிறார்கள். காவல் நிலையங்களை ஆய்வு செய்ய மாவட்ட தலைமை நீதிபதி விளாத்திகுளம் மேஜிஸ்திரேட் அவர்களை அனுப்பியதாகத் தெரிகிறது. வழக்கறிஞர்கள் சங்கம் சொன்னதன் அடிப்படையில் விளாத்திகுளம் மேஜிஸ்திரேட் புதுக்கோட்டை காவல்நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அவர் செல்லும் போது சட்டவிரோதமாக அங்கு யாரும் அடைத்து வைக்கப்படவில்லை. தனக்கு […]