ஸ்டெர்லைட் உரிமையாளர் அனில் அகர்வாலின் லண்டன் வீடு முன்பு போராட்டம்..!
ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை உரிமையாளர் அனில் அகர்வாலின் லண்டன் வீடு முன்பு தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முற்றுகையின்போது, காவல்துறையினர் நிகழ்த்திய துப்பாக்கிச்சூடு, பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்துள்ள தமிழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்நிலையில், ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை உள்ளிட்ட வேதாந்தா குழும நிறுவனங்களின் தலைவரான அனில் அகர்வால் வசிக்கும், லண்டன் வீட்டின் முன், பிரிட்டனில் வசிக்கும் தமிழர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். “ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் இங்குதான் இருக்கிறார்” எனக்கூறி, கண்டன முழக்க […]