போலீஸ்காரர்கள் போல நடித்து சினிமா பாவனையில் திருட்டு !
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் மணி, 72 வயதான இவர், தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக உள்ளார். வழக்கம் போல தனது சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்த அவரை ஆட்டோவில் வந்த 3 பேர் வழிமறித்து தாங்கள் போலீஸ்காரர்கள் என்றும்,குற்ற வழக்கொன்றில் விசாரிக்க வேண்டும் எனவும் கூறி ஆட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்றியுள்ளனர். அங்கிருந்து அமைந்தகரை வரை அழைத்து சென்று அவரிடம் இருந்த தங்க மோதிரம், பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அவரை வழியிலேயே […]